இந்திய நாடார்கள் பேரமைப்பின் காமராஜர் பிறந்த நாள் மற்றும் முப்பெரும் விழா அழைப்பிதழ்
- makkal viruppam
- Jul 10, 2023
- 2 min read

இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் முப்பெரும் விழா, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா, பேரமைப்பின் துவக்க நாள் விழா, பெரும் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, பற்றி இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவனர் - தலைவர் ராகம் சௌந்தர பாண்டியன் அவர்களின் அறிக்கை பின்வருமாறு,

அன்பு கொண்ட நாடாண்ட நாடார் இன சொந்தங்களே வணக்கம் கல்விக் கடவுள் கர்மவீரர் காமராஜரின் 121 வது அவதார திருநாள், இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பாக முப்பெரும் விழாவாக வருடம் தோறும் கொண்டாடுவது வழக்கம், அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் மிகச் சிறப்பாக சென்னையில் முக்கிய பகுதியில் பிரம்மாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது, இந்த ஆண்டு விழா வழக்கம் போல பெருந்தலைவரின் பிறந்தநாள் விழா, இந்திய நாடார்கள் பேரமைப்பின் துவக்க நாள் விழா, வெற்றி பெற்ற நமது இன சொந்தங்களுக்கு விருதுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. விழாவில் நமது இனத்தின் பெருமைகளாக விளங்குகின்ற சாதனைத் தலைவர்கள், அறிஞர்கள், பெரியவர்கள் கலந்து கொண்டு அவர்களது வாழ்க்கை அனுபவங்களை நமது வருங்கால சந்ததிகளுக்கு எடுத்து சொல்ல இருக்கிறார்கள், இது மிக பயனுள்ள கல்வி பெருவிழாவாக அமைய இருக்கிறது இந்த விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வருகின்ற நாடார் உறவின்முறை சங்கங்களை சார்ந்த உறுப்பினர்களின் குழந்தைகள் இந்த ஆண்டு 10 ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட இருக்கிறார்கள், எதிர்கால சந்ததிகள் சாதனைகள் புரிய வழிகாட்டி விழாவாக அவர்களை வாழ்த்தும் விழாவாக நடைபெற சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறோம், ஆகவே நமது நாடார் உறவின்முறை சங்கங்களின் உறுப்பினர்களின் அதிக மதிப்பெண் எடுத்த 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு குழந்தைகள் கீழ்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும்,

முதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களின் மதிப்பெண் சான்றிதழின் நகல், படிக்கும் படித்த பள்ளியின் விபரம், பிள்ளைகளின் பெற்றோர்களின் பெயர் விலாசம் தொழில் விவரங்கள், பிள்ளைகளின் பெற்றோர்கள் சார்ந்திருக்கும் உறவின்முறை சங்கத்தின் அதிகாரப்பூர்வ கடிதம், ஆகியவற்றை வருகின்ற 15/07/2023 அன்று மாலை 5 மணிக்குள்ளாக இந்திய நாடார்கள் பேரமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு கிடைக்குமாறு செய்திட வேண்டுகிறோம், இந்த நல்ல முயற்சிக்கு நமது சொந்தங்கள் ஒத்துழைப்பு நல்கிட அன்போடு கேட்டுக் கொள்கிறோம்,

அலுவலக முகவரி - ராகம் சௌந்தர பாண்டியன், இந்திய நாடார்கள் பேரமைப்பு, நிர்வாக அலுவலகம், பொன்மாரி இல்லம், எண் - 23, திருநகர், 29வது தெரு, வில்லிவாக்கம், சென்னை - 600049, அலைபேசி எண்கள்
8056295448, தொலைபேசி 044 - 48644448, ஈ -மெயில் ஐடி
என்ற முகவரிகளில் தொடர்பு கொண்டு ஆவணங்களை அனுப்பி வைத்து விழாவை சிறப்படைய செய்ய வேண்டுகிறோம். என
இந்திய நாடார்கள் பேரமைப்பு, நிறுவனர் - தலைவர், ராகம் சௌந்தர பாண்டியன் அழைப்பு விடுத்துள்ளார்.










Comments