தூத்துக்குடி, நாசரேத் சுற்று வட்டாரப் பகுதி ஆலயங்களில் விடிய விடிய ஈஸ்டர் பண்டிகை ஆராதனை.

தூத்துக்குடி மாவட்டம்,
நாசரேத் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தில் அனைத்து தேவ ஆலயங்களிலும் திரளாக மக்கள் பங்கேற்றனர்.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பெருவிழா ஏப்ரல் மாதம் 20ந்தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த கடைசி நாள்களில் தன்னுடைய சீடரால் 30 வெள்ளிக் காசுக்காக காட்டிக் கொடுக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து கிறிஸ்தவ ஆலயங் களில் விடிய விடிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
அதன்படி நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் சேகரத் தலைவர் ஹென்றி ஜீவானந்தம் தலைமையில் உதவிப்பாதிரியார் பொன் செல்வன் அசோக்குமார் ஆகியோர் முன்னிலையிலும், நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி தூயமாற்கு ஆலயத்தில் சேகரகுரு ஞான் சிங் எட்வின் தலைமையிலும், நாசரேத் அருகிலுள்ள பிரகாசபுரம் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் சேகர குரு நவராஜ், தலைமையிலும்,
கத்தோலிக்க தேவாலயத்தில் தேவாலயப் பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் தலைமையிலும்,நாசரேத் அருகிலுள்ள பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலயத்தில் சேகரத் தலைவர் தலைமையில் நாசரேத் அருகிலுள்ள வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தில் சேகரத் தலைவர் ஞான் சிங் தலைமையில் சபை ஊழியர் ஜான் வில்சன் முன்னிலையில் ஈஸ்டர் பண்டிகை ஆராதனை பரிசுத்த நற்கருணை ஆராதனை நடைபெற்றது.
கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற ஈஸ்டர் பண்டிகை ஆரா தனைகளில் கிறிஸ்தவர்கள் குடும்பமாக கலந்து கொண்டனர்.
நாசரேத் பரிசுத்த சீயோன் அசெம்பிளி ஆஃப் காட் சபையில் தலைமை போதகர் எட்வின் பிரபாகர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சபையின் மக்கள் திரளானோர் பங்கேற்றனர்
திருமறையூர் மறுரூப ஆலயத்தில் சேகர தலைவர் ஜான் சாமுவேல் தலைமையில் சபை ஊழியர் ஸ்டான்லி ஜான்சன் துரை முன்னிலையில் ஈஸ்டர் பண்டிகை ஆராதனை நடைபெற்றது.
செய்தியாளர் - ஏரல் கிறிஸ்டோபர்










Comments