top of page

வேலூர் கிழக்கு மாவட்ட போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தலைவராக பலராமன் நியமனம்.

Writer: makkal viruppam
makkal viruppam
Oct 6, 2023
1 min read

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் 15 ஆம் ஆண்டில் செயல்பட்டு வரும் வேலையில் புதிய மாவட்டமாக வேலூர் கிழக்கு மாவட்டம் உதயமானது.

வேலூர் கிழக்கு மாவட்ட தலைவராக சி.பலராமன் அவர்களை நியமித்தனர். துணைத் தலைவராக

கே.அறிவழகன், இணைச் செயலாளராக பி.முத்தமிழன் ஆகியோர் புதிதாக பொறுப்பேற்ற எளிய விழா,

தலைமை

அலுவலகத்தில் சென்னை ராயபுரம் 05-10-2023 காலை 11 மணி அளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும் ஜீனியஸ் டிவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில அமைப்பாளருமான

MJF lion Dr. L. பரமேஸ்வரன் அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து பொறுப்பேற்று கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞரணி தலைவரும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின், ஜீனியஸ் டிவி துணை ஆசிரியருமான

எல்.வேலாயுதம் , போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தொழில்நுட்ப அணி தலைவரும் ஜீனியஸ் டிவி செய்தியாளருமான

எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இச்சந்திப்பின் போது புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகிகளுக்கு சங்கத்தின் விதிமுறைகள், செயல் திட்டங்களை விளக்கமாக மாநில தலைவர் எடுத்துரைத்தார்,

வருங்கால கட்டங்களில் வேலூர் கிழக்கு மாவட்ட சங்கத்தின் வளர்ச்சிக்கும் சிறப்பாக செயல்படக் கூடியவர்களை இணைத்து மாநில தலைமையின் வழிகாட்டுதலின்படி செயல்பட வேலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Comments


Top Stories

தமிழ் ​அண்மை செய்திகளை தெரிந்துகொள்ள மக்கள் விருப்பம் இணையதளத்தை பின்தொடரவும் 

Thanks for subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2035 by The Global Morning. Powered and secured by Makkal Viruppam

bottom of page