இங்கிலாந்தில் பிறந்து திருவண்ணாமலையில் உடலைதகனம்செய்து காசியில்அஸ்தியை கரைக்ககூறி இறந்த கிறிஸ்தவபெண்

02/08/2023 திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் உள்ள எமன்லிங்கம் எதிரில் அருள்மிகு அண்ணாமலையார் தலைமையில் உடலை தகனம் செய்து காசியில் அஸ்தியை கரைக்க வேண்டும் என்று இங்கிலாந்தை சேர்ந்த 75 வயது மதிக்கத்தக்க பெண்ணின் விருப்பத்தை நிறைவேற்றிய சமூக சேவகர் மணிமாறன்,
திருவண்ணாமலை மாவட்டம்
எங்கோ பிறந்து எங்கோ முடியும் மானுட வாழ்க்கை மர்மம் நிறைந்தது, ஏற்ற இறக்கங்கள் கொண்டது, இன்றைய காலக்கட்டத்தில் போக்குவரத்து வசதிகள் அதிகரித்து விட்டது, இதனால் உலக நாடுகளுக்கு சென்று வருவது மிகவும் சுலபமாகி விட்டது,
இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டில் பிறந்து வளர்ந்த அன்னாலூசி என்ற பெண் இந்தியா மற்றும் இந்துமதம் பற்றி அறிந்து, அவர்
இந்தியா வந்து தனது வாழ்நாளை பயனுள்ளதாக்க திட்டமிட்டார்,
திருமணம் செய்து கொள்ளாத அவர்
15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்தார், இந்துமதத்தை தழுவிய அவர் தனது பெயரை மீனாட்சி என்று மாற்றி கொண்டார்.
திருவண்ணாமலை அவர் மனதை மிகவும் கவர்ந்ததால் நெடுங்கவாடி என்ற ஊரில் வாடகை வீடு எடுத்து தங்கி ஆன்மீக வழிபாட்டில் ஆர்வம் காட்டி வந்தார்,
அவர் நாய்கள் மீது மிகுந்த அன்பும் காட்டி வந்தார், அவருக்கு எட்வர்டு என்ற சகோதரர் உள்ளார் அவரும் மீனாட்சி விருப்பபடி வாழ பச்சை கொடி காட்டி விட்டார், இதனால் மீனாட்சி மிகவும் மகிழ்வுடன் வசித்து வந்தார்,
காலம் வேக வேகமாக சுழன்றதால் மீனாட்சி 72 வயதை எட்டிவிட்டார்,
தனது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்த மீனாட்சி தனது தோழிகளிடம் நான் இறந்ததும் எனது உடலை திருவண்ணா
மலையில் தகனம் செய்து அஸ்தியை காசியில் கரைக்க வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார், மேலும் சமூக சேவகர் மணிமாறனை என்பவரை ஒருமுறை சந்தித்தபோது தனது விருப்பத்தை தெரிவித்தார், அதற்கு மணிமாறனும் சம்மதம் தெரிவித்து இருந்தார்,
இதைத்தொடர்ந்து முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட மீனாட்சி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், கடந்த ஜூலை 23-ந்தேதி அவர் உயிர் பிரிந்தது, அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டு இருந்தது, இதுபற்றி தகவல் அறிந்த சமூக சேவகர் மணிமாறன் காவல்துறை அனுமதி பெற்று மீனாட்சி உடலை நேற்று 02/08/2023 காலை பெற்றார், பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள மயானத்துக்கு எடுத்து சென்று தகனம் செய்தார்,

முன்னதாக மீனாட்சி விருப்பபடி பாடைக்கட்டி அவரது உடல் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது,
இந்த நிகழ்ச்சியில் மீனாட்சியின் தோழிகள் கலந்து கொண்டனர்,
இங்கிலாந்து நாட்டில் பிறந்து திருவண்ணா
மலையில் தனது வாழ்வை முடித்துக் கொண்ட மீனாட்சி வாழ்க்கையும், அவரது விருப்பத்தை நிறைவேற்றிய சமூக சேவகர் மணிமாறன் சேவை மகத்தானது,

அவர் மீனாட்சியின் அஸ்தியை காசிக்கு கொண்டு சென்று கரைக்க ஏற்பாடுகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.










Comments