பணியில் திறமையில்லை… நாடகத்தில் திறமை அதிகம்..! “நாடகக் கலைஞர்கள், ஆசிரியர்கள் மீது கடும் குற்றச்சாட்டு..! உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுப்பாரா..?

இராணிப்பேட்டை மாவட்ட கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாக, நேர்மையாகவும், திறம்படவும் செயல்பட்டு வரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மோகனா அவர்களுக்கு எதிராக சில செயல்படாத ஆசிரியர்கள் திட்டமிட்டு கபட நாடகத்தில் ஈடுபட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்களில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் தொடர்ந்து ஆய்வு கூட்டங்கள், கண்காணிப்புகள், ஆலோசனைகள் மற்றும் செயல்திறன் மதிப்பீடுகளை தீவிரப்படுத்தி வரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மோகனா அவர்களின்,
நடவடிக்கைகள் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
கல்வியில் ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் பொறுப்புணர்வை கொண்டு வர அவர் எடுத்துவரும் முயற்சிகள், பல பள்ளிகளில் முன்னேற்றத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் பணியில் முழுமையான ஈடுபாடு இல்லாமல் செயல்பட்டு வந்த சில ஆசிரியர்கள், தங்களின் குறைகளை மறைப்பதற்காக அதிகாரியை குறிவைத்து பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் பரபரப்பு நாடகங்களை அரங்கேற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில் குறிப்பாக ஆற்காடு பகுதியை சேர்ந்த ஆசிரியர் கமலஹாசன், கூட்டத்தின் போது ஏற்பட்ட உடல்நலக்குறைவை “மன உளைச்சல்” என மாற்றி பெரிதுபடுத்தி சர்ச்சையை உருவாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனை அடிப்படையாக கொண்டு சமூக வலைதளங்களில் சிலர் தவறான தகவல்களை பரப்பி, நேர்மையான அதிகாரியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
“பணியில் பொறுப்பு இல்லை… ஆனால் பரபரப்பு உருவாக்கும் நடிப்பில் மட்டும் திறமை அதிகம்” என கல்வித்துறையினரிடையே கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மாணவர்களின் எதிர்காலத்தை முன்னிலைப்படுத்த வேண்டிய சில ஆசிரியர்கள், தற்போது தனிப்பட்ட சலுகைகள் மற்றும் குழு அரசியலை முன்னிறுத்தி கல்வித்துறையின் கண்ணியத்தையே பாதிக்க முயற்சிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
கல்வித்துறையில் ஒழுக்கத்தை நிலைநாட்ட முயற்சிக்கும், அதிகாரிகளை குறிவைத்து கபட நாடகங்களில் ஈடுபடுபவர்கள் மீது, மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு உண்மை நிலையை ஆராய்ந்து, நேர்மையான அதிகாரி மோகனா அவர்களுக்கு, ஆதரவாக நிற்க வேண்டும் என்றும்,
பொய்யான அவதூறு மற்றும் பரபரப்பு நாடகங்களில் ஈடுபடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், கல்வி ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.










Comments