செய்தியாளர் கயல்விழி யின், மகன் கே.வி.ராஜாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், அவரின் சிலையை திறந்து வைத்தார் நீதியரசர் துரை கருணாகரன் அவர்கள்.
- makkal viruppam
- Jun 12
- 1 min read

2025 ஆம் வருடம், நாளைய தீர்ப்பு இதழின் செய்தியாளர் கயல்விழி அவர்களின், மகன் கே.வி.ராஜா (எ) ஆரோக்கிய ராஜா அவர்கள், அவர் படித்த கல்லூரியில் நடந்த ஒரு சில பிரச்சனைகளால், தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் 09.06.2026 அன்று, கயல்விழி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது,

இந்நிகழ்வில்
விக்டோரியா செஷலில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு.துரை கருணாகரன் அவர்கள், கலந்து கொண்டு கே.வி.ராஜா அவர்களின் சிலையை திறந்து வைத்தார்,

மேலும் இந்நிகழ்வில்,
தலைமை செயலக பத்திரிகையாளர் சங்க தலைவர் குமார், அதிரடி குரல் இதழின் ஆசிரியர் வி.என்.ஜெயகாந்த்,
அதிரடிச் சட்டம் இதழின் ஆசிரியர் கிருஷ்ணன்,

காங்கிரஸ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் துரைராஜ், வீரத்தமிழர் பேரவையின் தலைவர் தங்கபாஸ்கரன்,

151 வது வட்ட மாமன்ற உறுப்பினர் சங்கர் கணேஷ்,

ஏசியன் யூத் சென்டர் நிர்வாகிகள் திருநங்கைகளுக்கான போராட்ட போராளி மந்த்ரா, சௌமியா, நவீன், வீரமங்கை லட்சுமி மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்,

சமூக ஆர்வலர்கள், பத்திரிகை துறையின் நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு ,

குழந்தைக்கு ஏற்பட்ட அவலங்களை துடைத்தெறிய இந்த ஆண்டு சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையை அந்த தாய்க்கு தந்துள்ளார்கள்.

ஒரு குழந்தையின் அவலம் ஒரு வருடமாகியும் முறையான நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்ற கவலைகளை மறக்க முடியாமல் தனது குழந்தையை,

சிலை வடிவத்தில் வைத்து தினம் தினம் மன ரீதியாக சிதைந்து கொண்டு வரும் தாய்க்கு ஆறுதல் கொடுத்தார்கள்.










Comments