சிறு பத்திரிகையாளர்களுக்கு, திமுக, செய்த துரோகத்தை சரி செய்யுங்கள், முதல்வர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களே.

சிறு பத்திரிகைகளுக்கு சலுகைகள் வழங்குங்கள், முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன்,
அவர்களின் புதிய பணி சிறக்க வாழ்த்துக்கள்,
பெரும்பான்மையான மக்களின் வாக்குகளைப் பெற்று
தமிழ்நாட்டின் முதல்வராக அமர்ந்திருக்கும் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கும், அவர்களுடைய அரசில் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும்,

ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்ற 5 ஆண்டுகளில் சிறு பத்திரிகையாளர்களின் அங்கீகாரத்தை குறைத்துக் கொண்டே வந்து விட்டார்கள், அரசு அடையாள அட்டை கொடுப்பதற்கு கடுமையான விதிகளை ஏற்படுத்தி, பெரிய, பெரிய பத்திரிகையாளர்கள் மட்டும் பயன்படும் வகையில் நடந்து கொண்டு, சிறு பத்திரிகையாளர்களை நசுக்கி விட்டார்கள்.
அன்று, இந்தியாவின் சுதந்திரத்திற்கு பெரிதும் பாடுபட்டவர்கள் சிறு பத்திரிகையாளர்கள், என்பதை யாரும் மறுத்து விட முடியாது.
தற்போது செய்தித் துறையில், சிறு பத்திரிகைகளின் தினசரி மற்றும் பருவ இதழ்களுக்கு உரிய அங்கீகாரம் இதுவரை சரியாக வழங்கப்படவில்லை,
அதை நீங்கள் சரி செய்வீர்கள் என நம்புகிறோம்,
அதை சரி செய்து, அனைத்து சிறிய இதழ்களுக்கும் அரசு அடையாள அட்டை மற்றும் அரசு விளம்பரங்கள் அளித்து, சிறு, குறு இதழ் பத்திரிகையாளர்களின்
வாழ்வாதாரத்தை காக்கும் படி, தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கும், இத்துறை அமைச்சர் அவர்களுக்கும்,

ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் தமிழ்நாடு,
தலைவர், த.மு.தருமராஜா D.Astro
மற்றும் நிர்வாகிகள்,
வாழ்த்து தெரிவித்து, கோரிக்கை வைத்துள்ளார்கள்.










Comments