நடிகர் விஜய்க்கு ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற குளிர்சுரம் இப்பவே அடிக்க ஆரம்பித்து விட்டது.
- makkal viruppam
- Jun 18, 2023
- 1 min read

எதிர்ப் பார்ப்போடு களம் இறங்கும் நடிகர் விஜய்க்கு "எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி" வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

குப்பை எடுப்பவன் முதல், மாடி வீட்டுப் பணக்காரன் வரை ஆதாயம் தேடி தான் அரசியலுக்கு வருகிறான்,
மக்கள் சேவை என்பது காமராஜர், "எம்.ஜி.ஆர்" இருவர்களோடு முடிந்துவிட்டது,

மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கிய விழாவில் விஜய் கூறியது,"ஒவ்வொரு மாணவ மாணவியரும் தங்கள் பெற்றோரிடம் காசு வாங்கி கொண்டு ஒட்டு போடாதீர்கள்" என்று கூறும்படி அறிவுரை கூறியுள்ளார்.

தியேட்டரில் "பிளாக்கில் டிக்கெட்" வாங்கிப் படம் பார்க்காதீர்கள் என்று விழாவில் விஜய் அறிவுரை சொல்வில்லையே. தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற குளிர் சுரம் இவருக்கு இப்பவே அடிக்க ஆரம்பித்துவிட்டது.
சினிமா துறையில் இருக்கின்ற இவர் "எம்.ஜி.ஆர்" பெயரை குறிப்பிட மறந்து விட்டாரே...இவருக்கு "எம்.ஜி.ஆரை" பிடிக்காது போலும்.
"எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி".
தலைவர் எம்ஜிஆர் விஸ்வநாதன் எம்ஏ பிஎல்










Comments