top of page

லஞ்சம் பெற்ற சார் பதிவாளருக்கு சம்மன் 04/09/2023 அன்று ஆஜராக உத்தரவு.

  • Writer: makkal viruppam
    makkal viruppam
  • Sep 4, 2023
  • 2 min read

கடலூர் மாவட்டம் - விருத்தாசலத்தில் இயங்கி வரும் 1-ம் இணை பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமிபுரத்தை சேர்ந்த சங்கீதா (வயது 35) பணியாற்றி வருகிறார்.

பத்திரப்பதிவு செய்வதற்காகவும், ஆவணங்கள் பதிவு செய்வதற்காகவும், இதர பதிவுகளுக்காகவும் சார்பதிவாளர் சங்கீதாவை ஆவண எழுத்தர்கள் சந்தித்து லஞ்சம் கொடுக்கப்போவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் 30/08/2023 அன்று கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை செய்ததில்,

பத்திரப்பதிவு செய்வதற்காக பொதுமக்கள் மற்றும் புரோக்கர்கள் மூலம் லஞ்சமாக சார் பதிவாளர் சங்கீதா பெற்றபணம் மற்றும் ஜி-பே, போன்-பே, வழியாக பெற்ற 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய், மேலும் ஆவண எழுத்தர்கள் பாலதண்டாயுதம், கந்தசாமி உள்ளிட்ட சிலர் சார் பதிவாளருக்கு கொடுக்க வைத்திருந்த லஞ்ச பணம் 17 ஆயிரத்தையும் கைப்பற்றினர்,

மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து சார்பதிவாளர் சங்கீதாவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தபோது, ஆவண எழுத்தர்கள் மற்றும் புரோக்கர்களிடம் இருந்து அவரது உதவியாளர் உதயகுமார் மூலம் லஞ்ச பணத்தை ஜி-பே, போன்-பே, பே-டி.எம், மற்றும் பணமாகவும் பெற்றும், 2, 3 நாட்கள் சேர்த்து வைத்த பணத்தை சார் பதிவாளர் ஆலோசனைபடி, விருத்தாசலம் பெரியார்நகரில் இயங்கி வரும் ரியல் எஸ்டேட் உரிமையாளர் குமாரிடம் கொடுக்க வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதுவரை 41 லட்சம் ரூபாய் கொடுத்தது அவர்களின் பண பரிவர்த்தனையின் மூலம் தெரியவந்துள்ளது.

யு.பி.ஐ. பரிவர்த்தனை மூலம் பெறப்பட்ட லட்சக்கணக்கான பணம் குறித்து வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

லஞ்ச பணத்தில் சார் பதிவாளர் சங்கீதா உளுந்தூர்பேட்டையில் 12 வீட்டு மனைகள் வாங்க பதிவு செய்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

லஞ்ச பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக சார் பதிவாளர் சங்கீதா, அவரது உதவியாளர் ஸ்ரீமுஷ்ணம் செங்குந்தர் தெரு உதயகுமார்(34), விருத்தாசலம் பெரியார்நகர் ரியல் எஸ்டேட் உரிமையாளர் குமார் (45), ஆவண எழுத்தர்கள் கந்தசாமி, பாலதண்டாயுதம் ஆகிய 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லஞ்ச வழக்கில் சிக்கிய சார்பதிவாளர் சங்கீதா இதற்கு முன் சங்கராபுரம் கள்ளக்குறிச்சியில் பணியாற்றியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் விருத்தாசலத்தில் பணியாற்றி வருகிறார் என்பதும், இந்த காலக்கட்டத்தில்தான் அதிகளவு லஞ்சம் வாங்கியுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கியதால் சார் பதிவாளர் சங்கீதாவின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 31/08/2023 அன்று இரவு சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.

அதில் பல ஆவணங்களின் நகல் மட்டுமே உள்ளது, எனவே இது தொடர்பாக செப்டம்பர் - 4-ம் தேதி திங்கட்கிழமை விசாரணை நடத்த உள்ளதாகவும், அன்றைய தினம் சார்பதிவாளர் சங்கீதா அசல் ஆவணங்களுடன் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Comments


Top Stories

தமிழ் ​அண்மை செய்திகளை தெரிந்துகொள்ள மக்கள் விருப்பம் இணையதளத்தை பின்தொடரவும் 

Thanks for subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2035 by The Global Morning. Powered and secured by Makkal Viruppam

bottom of page