top of page

அருள்மிகு ஸ்ரீ வில்லாயுதமுடைய அய்யனார் சுவாமி திருக்கோயில் ஜீர்னோத்தாரண அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

Writer: makkal viruppam
makkal viruppam
Jul 15, 2025
1 min read




மதுரை மாவட்டம், கோச்சடை கிராமத்தில் அமைந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும்


அருள்மிகு ஸ்ரீ வில்லாயுதமுடைய அய்யனார் சுவாமி


அருள்மிகு ஸ்ரீ முத்தையா கருப்பையா சுவாமி ஸ்ரீ நாகப்ப சுவாமி


திருக்கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா


நிகழும் மங்களகரமான சுபஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 29ம் நாள் 13.07.2025 ஞாயிற்றுக்கிழமை திரிதியை திதியும், திருவோண நட்சத்திரமும், அமிர்தயோகமும் சுக்கிர ஹோரையும் மிதுன லக்னமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அன்று காலை 06.45 மணிக்குமேல் 07.45 மணிக்குள் மதுரை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் அவர்கள் மற்றும் கோச்சடை கிராமத்தார்கள் மற்றும் குலால சிவாச்சாரியார்கள் முன்னிலையில் பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ வில்லாயுதமுடைய அய்யனார் சுவாமி ஸ்ரீ முத்தையா கருப்பையா சுவாமி ஸ்ரீ நாகப்ப சுவாமி விமானம் மற்றும் பரிவார தேவதைகளுக்கு ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது,

ஆன்மீக மெய்யன்பர்களும், பக்த கோடி பொதுமக்களும்,

ஸ்ரீ வில்லாயுதமுடைய அய்யனார் திருக்கோவில்

பரம்பரை அறங்காவலர்கள், பூசாரிகள், மற்றும்

கோச்சடை கிராமத்தார்கள்,

கோச்சடை முத்தையா சுவாமி கும்பிடும் அனைத்து ஊர்குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் என 5000 த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் அருள் பெற்றார்கள்.


செய்தியாளர் - த.மு.தருமராஜா D, Astro

Comments


Top Stories

தமிழ் ​அண்மை செய்திகளை தெரிந்துகொள்ள மக்கள் விருப்பம் இணையதளத்தை பின்தொடரவும் 

Thanks for subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2035 by The Global Morning. Powered and secured by Makkal Viruppam

bottom of page