முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் திருப்பூர் மாவட்டம் அரசு விழாவில் கலந்து கொள்ள உள்ளார், அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தகவல்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் திருப்பூர் மாவட்டம் அரசு விழாவில் கலந்து கொள்ள உள்ளார், அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தகவல்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் 22.07.2025 மற்றும் 23.07.2025 ஆகிய
இரண்டு நாட்கள் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார்.
ஆகையால், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மனிஷ் நாரணவரே இ.ஆ.ப., மாநகர காவல் ஆணையர் எஸ்.ராஜேந்திரன் இ.கா.ப.,, மாநகராட்சி ஆணையர் எம்.பி.அமித் இ.ஆ.ப.,, மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
திருப்பூர் மாவட்ட செய்தியாளர் - ர.கலைச்செல்வம்










Comments