top of page

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் தன்னம்பிக்கையுடன் பணியாற்றுங்கள் என வட்டாரக் கல்வி அலுவலர் அறிவுரை

Writer: makkal viruppam
makkal viruppam
Jun 28, 2023
1 min read

கந்தர்வக்கோட்டை ஜீன்

29. ல்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் நடைபெறும் இல்லம் தேடி கல்வி மையத்தை வட்டார கல்வி அலுவலர்கள் வெங்கடேஸ்வரி, நரசிம்மன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்த போது மாணவர்கள் வருகை, பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு இல்லம் தேடி கல்விமையத்தில் நடைபெறும் கற்றல், கற்பித்தல் முறைகளை பெற்றோருடன் கலந்துரையாடல் வேண்டும்‌.

மாணவர் வருகையை அதிகரிக்க வேண்டும்.

குறைதீர் கற்பித்தலில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி குறைதீர் கற்பித்தலை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

அரசு பள்ளியில் பெற்றோர்கள் குழந்தைகளை சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தன்னார்வலர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள பயிற்சி, மாணவர்களுக்கு கற்பிக்கும் முறை பற்றி ஆய்வு செய்தும்,

தன்னார்வலர்கள் தன்னம்பிக்கையுடன் பணியாற்றுங்கள் என்று அறிவுரை வழங்கினார். பார்வையின் போது வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பிரகாஷ், ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ்குமார் ,இல்லம் தேடி கல்வி ரகமதுல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments


Top Stories

தமிழ் ​அண்மை செய்திகளை தெரிந்துகொள்ள மக்கள் விருப்பம் இணையதளத்தை பின்தொடரவும் 

Thanks for subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2035 by The Global Morning. Powered and secured by Makkal Viruppam

bottom of page