மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக பட்டுக்கோட்டை திமுக எம்.எல்.ஏ.அண்ணாதுரை
- makkal viruppam
- Jun 12, 2023
- 2 min read

பட்டுக்கோட்டை நீர்நிலை பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மண் அள்ளும் ஆளும் கட்சியினர்.
அவர்களுக்கு ஆதரவாக டிஎஸ்பியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள திட்டக்குடி கிராமத்தில் குளத்து மண் அள்ளுவதற்கு கிட்டத்தட்ட மூன்று மீட்டர் அனுமதிக்கப்பட்ட நிலையில், 20 அடிக்கு மேல் மண் அள்ளப்படுவதாகவும், அதேபோல் மண் அள்ளுவதற்கு அனுமதிக்கப்பட்ட கால அளவை தாண்டியும் மண் அள்ளுவதாக கூறப்படுகிறது.

திட்டக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள திமுக பொறுப்பாளர்களுக்கு மண் அள்ளுவதற்கு அனுமதி வாங்கி கொடுத்த பட்டுக்கோட்டை எம் எல் ஏ அண்ணாதுரை , தன் ஆதரவாளர்களுக்கு ஆதரவாக அதிகாரிகளையும் மிரட்டுவதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டிய நிலையில், சம்பவ இடத்தில் ஆய்வு செய்த தனி வருவாய் ஆய்வாளர் ராஜேஷ், ( புவியியல் மற்றும் சுரங்க துறை தஞ்சாவூர் மாவட்டம் Cell: 99434 66014) உடனடியாக மண் அள்ளுவதை நிறுத்தி சொல்லி உத்தரவிட்டு விட்டு வந்துள்ளார்.
மேலும் அவர் கொடுத்த புகார் அடிப்படையில் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் டி எஸ் பி பாலாஜி (பொ) உத்தரவின் பெயரில் இரண்டு ஜேசிபி மற்றும் மண்அள்ள பயன்படுத்தப்பட்ட டிராக்டர்களையும் பறிமுதல் செய்து பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்தனர்.

அதனை தொடர்ந்து பட்டுக்கோட்டை எம்எல்ஏவும், திமுகவின் மாவட்ட செயலாளருமான எம்எல்ஏ அண்ணாதுரை பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி மேல் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வாகனங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டுமெனக் கூறியதாகவும் அதற்கு தாசில்தார் ராமச்சந்திரன் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது,

அதனை தொடர்ந்து தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் வாகனங்களின் சாவியை கேட்கின்ற பொழுது அவர் டிஎஸ்பி உத்தரவு இல்லாமல் வாகனங்கள் தர முடியாது என்று கூறி மறுத்து விட்டார்,

அதன் பிறகு நேரடியாக பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை டிஎஸ்பி பாலாஜிக்கு போன் செய்து அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மண் அள்ளி தவறு என்றும், அது சம்பந்தமாக வருவாய் துறை அலுவலர் தாசில்தாரிடம் பேசி பிரச்சனை சுமூகமாக முடித்து விட்டதாகவும் , தங்களின் உதவி ஆய்வாளர் வாகனங்களை சாவியை தர மறுப்பதால் நீங்கள் உத்தரவு விட்டு சாவியை கொடுக்க சொல்லுங்கள் என்று பேசி உள்ளார்.

அதற்கு பட்டுக்கோட்டை டிஎஸ்பி பாலாஜி, அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு ஆழமாகவும், அதே போல் அனுமதிக்கப்பட்ட காலங்கள் காலாவதி ஆகியும் மண் அள்ளுவதால் இந்த புகார் மேல்மட்டம் வரை சென்றுள்ளதால் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது என்று வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். உடனடியாக ஆத்திரப்பட்ட பட்டுக்கோட்டை எம்எல்ஏ அதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை வருவாய் துறை தாசில்தார் அனுமதிக்கும் பட்சத்தில் நீங்கள் யார் நான் சட்டம் தெரிந்த வழக்கறிஞர் என்று வாதாடுகிறார், நீண்ட உரையாடல் நடந்த பிறகு முடிவாக டிஎஸ்பி பாலாஜி நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் வழக்கு பதிவு செய்யாமல் வாகனங்களை தர முடியாது என்று கூறி விடுகிறார்.

இந்த ஆடியோ மற்றும் செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி பட்டுக்கோட்டை பகுதி திமுக உறுப்பினர்ளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. திமுகவின் நகர, ஒன்றிய பொறுப்பாளர்களில் பெரும்பாலான நபர்கள் திமுக மாவட்ட செயலாளரும் பட்டுக்கோட்டை எம்எல்ஏ வுமான அண்ணாதுரைக்கு எதிராக இருப்பதால் அவர்கள் மூலம் இந்த செய்தி அதிக அளவில் பரப்பப்படுவதாக கூறப்படுகிறது.
குறிப்பு :

இந்நிலையில் இந்த ஆடியோ வெளியான நிலையில் பட்டுக்கோட்டை டிஎஸ்பியை நாம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அந்த நிகழ்வு உண்மை என்றும் இந்த ஆடியோ தான் யாருக்கும் கொடுக்கவில்லை என்றும் இது எப்படி போனது என்று தனக்கு தெரியாது என்று கூறி விட்டார். ( DSP. பாலாஜி 9840389444 )
பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரையை தொடர்புகொண்ட பொழுது அவர் தொலைபேசி எடுக்கவில்லை . ( MLA Annathurai Cell 9443545824)










Comments