குமரிதந்தை நேசமணி நாடார் அவர்களுக்கு சென்னையில் முழு உருவச் சிலை வைக்க நாடார்கள் பேரமைப்பு கோரிக்கை

கன்னியாகுமரியை மீட்டு தமிழகத்தில் இணைக்க போராடி வெற்றி கண்ட குமரித்தந்தை அய்யா.மார்சல் ஏ. நேசமணி நாடார் அவர்களின் 129-ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு 12.06.2023 அன்று காலை 11.00 மணியளவில் இந்திய நாடார்கள் பேரமைப்பின் தலைமை அலுவலகத்தில் இந்திய நாடார்கள் பேரமைப்பின் தலைவர் ராகம் செளந்திரபாண்டியன் அவர்களின் ஆலோசனையின்படி திருவுருவப்படத்திற்கு பேரமைப்பின் பொதுச் செயலாளர் கே.எஸ்.மலர்மன்னன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் பேரமைப்பின் பொருளாளர் ஏ எம் டி சிவக்குமார், தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் பேச்சியம்மாள் ஜெயராமன், சுய தொழில் அணி துணைத் தலைவர் மகேஸ்வரி பாலு,

மாநில ஆலோசகர் எஸ்.டி.பன்னீர்செல்வம்,

வடசென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் டிஆர்பி குமரன், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர்
ஏ.பாலாஜி, வடசென்னை தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் எஸ்.ரவி ராஜன், வடசென்னை தகவல் தொழில் நுட்ப பிரிவு துணைத் தலைவர் ஆர்.செந்தில், வடசென்னை இளைஞரணி துணைத் தலைவர் எம்.தியாகவேல், தலைமை நிலைய அலுவலர் என்.சிவராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு அன்னாருக்கு புகழ் வணக்கம் செலுத்தினர்.

நிகழ்ச்சியின் பொழுது குமரி த்தந்தை மார்சல் ஏ நேசமணி நாடார் அவர்களுக்கு சென்னையில்

பிரதான இடத்தில் முழு உருவச்சிலை அமைக்க இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.










Comments