காமராஜர் பிறந்த நாள் விழா, நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள், அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
காமராஜர் பிறந்த நாள் விழா,
நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்,
அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.

தமிழ்நாடு நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கர்மவீரர் காமராஜர் 123 வது பிறந்த நாள் விழா, ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சமுதாய சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, என
முப்பெரும் விழா
சென்னை, ஆலந்தூரில் பெருந்தலைவர் பாரத் ரத்னா காமராஜர் திருமண மண்டபத்தில்
கூட்டமைப்பின் தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன் நாடார் தலைமையில் 25.07.2025 அன்று நடைபெற்றது,

இந்நிகழ்வில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சமத்துவ மக்கள் கழகம் தலைவர், மற்றும் பனை நல வாரிய தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன்,


பாலபிரஜாபதி அடிகளார், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், விஜிபி குழும தலைவர் வி.ஜி.சந்தோசம், ஆகியோர்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2 பெண்களுக்கு தையல் இயந்திரம், 100 பெண்களுக்கு 25 கிலோ அரிசி, மற்றும் புடவைகள் வழங்கினார்கள், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்,

மேலும் இந்நிகழ்ச்சியில்
சிறப்பு அழைப்பாளர்களாக,
கண்ணன், தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் என்ஜினீயர் டி.விஜயகுமார், காமராஜர் அவர்களின் பேத்தி கமலிகா காமராஜர்,

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் துணைத் தலைவர், ஆலந்தூர் நாடார் சங்க தலைவர் ஆலந்தூர் பி.கணேசன் நாடார், பழம் பொருள் அணி தலைவர் பூவை ஜெயக்குமார், இளைஞர் அணி தலைவர் அம்ஜி சரவணன்,

மக்கள் விருப்பம் த.மு.தருமராஜா,
கிருஷ்ண கிருஷ்ணன், நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் ஸ்ரீனிவாசன் நாடார், நாடார் மகாஜன சபை தலைவர் கார்த்திகேயன், தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க தலைவர் சந்திரன் ஜெயபால், டாக்டர் எம்.குமரன், வணிகர் பேரவை
தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் துரை மாணிக்கம், தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் ஆர்.தனபால் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்,

நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கூட்டமைப்பின்
தலைவர் மின்னல் ஸ்டீபன், பொது செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர் அழகுராஜ், தாம்பரம் ஞானபால் சோழிங்கநல்லூர் முத்துக்குமார், கூடுவாஞ்சேரி ஜவகர், ஆலந்தூர் ஸ்டீபன், பல்லாவரம் வேல்
குமார், குன்றத்தூர் அஜய்ராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்,

மேலும் ஏராளமான கூட்டமைப்பு நிர்வாகிகள், நாடார் சங்கங்களின் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் - எஸ்.வி.கோபிநாத் BA,










Comments