பட்டுக்கோட்டை கார்காவாயல் ஆதி சிவசக்தி ருத்ர சித்தர் ஞான பீடத்தில் 10008 வேல் பூஜை நடைபெற்றது.
May 29, 2023
1 min read

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கார்காவாயல் கிராமத்தில் உள்ள ஆதி சிவசக்தி சித்தர் ஞான பீடத்தில் 28/05/2023 அன்று சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத 10008 வேல் பூஜை நடைபெற்றது,

இவ்வேல்பூஜையில் சிங்கப்பூர், மலேஷியா, இந்தியா மற்றும் தமிழகம் முழுவதிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட பக்தர்களை பட்டுக்கோட்டை ஆதி சிவ சக்தி ருத்ர சித்தர் வரவேற்று ஆசி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன், புலிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சு.பாஸ்கர் MABL கலந்து கொண்டனர்.

சிறுவர் சிறுமிகளின் நடன நிகழ்ச்சி மற்றும் இசை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.










Comments