top of page

பட்டுக்கோட்டை பாளையம் 2.5 கோடி ரூபாய் சீட்டுப்போட்டு ஏமாற்றியஅமுதா- முதியவர் தற்கொலை முயற்சி.

Writer: makkal viruppam
makkal viruppam
Jun 16, 2023
1 min read

பட்டுக்கோட்டையில் ஏலச்சீட்டு நடத்தி 2 கோடியே 50 லட்சம் பணத்தை மோசடி செய்தவரின் வீட்டின் முன்பு முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு....

மோசடி செய்தவர் வீட்டின் முன்பு பணம் கொடுத்தவர்கள் திரண்டதால் காவல்துறை விசாரணை.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கீழப்பாளையம் தெருவை சேர்ந்தவர் அமுதா சின்னசாமி என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.

இவரிடம் அப்பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்டோர் சீட்டுக்காக 2 கோடியே 50 லட்சம் பணம் கொடுத்துள்ளனர். ஒரு சிலரிடம் நான்

ஏலசீட்டு நடத்தி வருகிறேன், ஆகையால் உங்கள் பணத்தையோ, நகையையோ திருப்பி தந்து விடுகிறேன் எனக் கூறியும் பணம், நகை உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளார். இதனிடையே சீட்டுப்பணம் கொடுத்தவர்களிடமும் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை, நகையை கடனாக பெற்றவர்களிடமும் நகையையோ பணத்தையோ திரும்ப கொடுக்கவில்லை. மாறாக தங்களின் நகையையோ, பணத்தையோ திரும்பக்கேட்டு வருபவர்களை தங்கள் மகன்கள் உதயகுமார், பாலாஜி ஆகியோரை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் சிலபேர் பயந்து, கொடுத்த பணத்தை கேட்காமலும் இருந்து வருகின்றனர். இந்நிலையில், 3 ஆண்டுகளாகியும் தங்கள் பணத்தையோ, நகையையோ அமுதா திருப்பி கொடுக்காததால், பாதிக்கப்பட்ட 40க்கும் மேற்பட்டோர் இன்று ஏலச்சீட்டு நடத்தி வந்த அமுதாவின் வீட்டின் முன்பு திரண்டனர்.

உடன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பட்டுக்கோட்டை பொறுப்பு உதவி ஆய்வாளர் ராம்குமார் உள்ளிட்ட காவல்துறையினர் வந்து விசாரணை நடத்தி புகாரைப் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

மேலும் அமுதாவின் மகன்கள் உதயகுமார் மற்றும் பாலாஜி ஆகியோரை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனிடையே தன் மகளின் திருமணத்திற்காக சீட்டு பணத்தை கேட்க வந்த முதியவர் பொன்னவராயன் கோட்டையை சேர்ந்த சங்கர், பணம் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற குழப்பத்தில் திடீரென்று தான் வைத்திருந்த பெட்ரோல் தன் உடலில் ஊற்றிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அருகில் இருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி அவரை சமாதானப்படுத்தி, பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதியவர் சங்கர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இதனால் பட்டுக்கோட்டை கீழப்பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Comments


Top Stories

தமிழ் ​அண்மை செய்திகளை தெரிந்துகொள்ள மக்கள் விருப்பம் இணையதளத்தை பின்தொடரவும் 

Thanks for subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2035 by The Global Morning. Powered and secured by Makkal Viruppam

bottom of page