top of page

ஸ்ரீ ஆதி சிவசக்தி ருத்ர சித்தர் வழிபாட்டு மன்றம் துவக்கம், சென்னை அருகே திருமழிசையில்.

Writer: makkal viruppam
makkal viruppam
Nov 9, 2023
1 min read

தஞ்சாவூர் மாவட்டம் - பட்டுக்கோட்டை அருகே உள்ள கார்காவாயல் கிராமத்தில்

ஸ்ரீஆதி சிவசக்தி ருத்ர சித்தர் என்பவர் ஸ்ரீ ஆதி சிவசக்தி அம்மன் ஆலயம் அமைத்து அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி காலங்களில் யாகமும் மற்றும் தினமும் 5 கால பூஜைகளும் அங்கு நடைபெற்று கொண்டு வருகிறது,

இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்த துன்பமாக இருந்தாலும் ருத்ர சித்தர் அவர்கள் தீர்த்து வைத்து நலமுடன் வாழ வைத்து வருகிறார் என நிறைய அவருடைய பக்தர்கள் நமது மக்கள் விருப்பம் நியூஸ் சேனலில் பேட்டி அளித்து உள்ளார்கள்.


மேலும் அந்த சித்தர் பீடத்தில் அதிகப்படியான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர், மேலும் ருத்ர சித்தர் அவர்களுக்கு சிங்கப்பூர், மலேசியா, இந்தியாவில் பெங்களூர் மற்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் ஸ்ரீஆதி சிவசக்தி ருத்ர சித்தர் வழிபாட்டு மன்றம் துவக்கப்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு நன்மைகள் செய்து வருகின்றனர்,

05/11/2023 அன்று சென்னையை அடுத்துள்ள திருமழிசையில் நக்கீரன் - தமிழ்ச்செல்வி, ஞானம் - கலையரசி, விஜயசங்கர் - அருள்மொழி, அறிவழகன் - துர்கா, அசோக் - ஜெயந்தி, செல்வகுமார் - நிஷா ஆகியோரின் ஏற்பாட்டில் ஸ்ரீஆதி சிவசக்தி ருத்ர சித்தர் வழிபாட்டு மன்றம் துவக்கப்பட்டது.

200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்,

அனைவரையும் ருத்ர சித்தர் அவர்கள் அருள் வாக்கு கூறி ஆசீர்வதித்தார்.

இந்நிகழ்ச்சியில்

பிரபு, மாலா, கோபு, கவிதா, கௌரி, எழில், ஆலயம்மாள், பரந்தாமன், செல்வம், சதீஷ், பிரியா,

டி.எம்.ரமேஷ், வேலு, பிரவீன் குமார், புகழ், கோகுல், தட்சினி, தேவரிஷ், திவ்யா, சஞ்சய், கோபி, சிவா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சித்தர் அவர்களிடம் ஆசி பெற்றனர்.

Comments


Top Stories

தமிழ் ​அண்மை செய்திகளை தெரிந்துகொள்ள மக்கள் விருப்பம் இணையதளத்தை பின்தொடரவும் 

Thanks for subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2035 by The Global Morning. Powered and secured by Makkal Viruppam

bottom of page