வயதான முதியோர்களை பாதுகாக்க, சமாரிட்டன் அறக்கட்டளை சார்பில் பல்லாவரத்தில் சேவை மையம் திறப்பு.

சமாரிட்டன் அறக்கட்டளை நிறுவனரும், ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் - தமிழ்நாடு ,
செங்கல்பட்டு மாவட்ட அமைப்பாளர் N.யேசு குமார் அவர்கள் ஏற்பாட்டில்,

வயதான முதியோர்களுக்கான சேவை மையம், மற்றும் ஏழை பெண்களுக்கான இலவச தையல் வகுப்பு, போன்ற சமூக சேவைகள் செய்வதற்கு என உருவாக்கப்பட்ட சமாரிட்டன் சேவை மையத்தை,

தாம்பரம் மாநகராட்சி 16 வது வார்டு மாமன்ற உறுப்பினர் S.நெடுஞ்செழியன் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்,

மேலும் சமூக சேவைகள் அதிகமாக செய்து வரும் யேசுகுமார் அவர்களை வாழ்த்தினார் , சமாரிட்டன் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கி, தையல் இயந்திரம் வாங்கி தருவதாகவும் உறுதி அளித்தார், மேலும் இந்நிகழ்ச்சியில்

சிறப்பு விருந்தினராக,
ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் - தமிழ்நாடு, மாநில தலைவர் -D.M.தருமராஜா D, Astro,

செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் C.இமையரசு, துணை அமைப்பாளர் N.கணேஷ் ராம், துணை பொறுப்பாளர் B.சுரேஷ்,
பாஸ்டர் L.ரமேஷ், Rev.மோகன் மற்றும்

உறவினர்கள், நண்பர்கள் , பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.










Comments