top of page

வேளச்சேரி - ஃபீனிக்ஸ் மால் பூங்கா, எல்லைமீறும் காதலர்கள் ? நடவடிக்கை எடுக்குமா காவல்துறை ?

  • Writer: makkal viruppam
    makkal viruppam
  • Jul 15, 2023
  • 1 min read

சென்னை - வேளச்சேரி பீனிக்ஸ் மால் பின்புறம், சென்னை மாநகராட்சி திறந்தவெளி பூங்கா ஒன்று உள்ளது, அதில் காலை 6:00 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிப்பு பலகை உள்ளது, அந்த பூங்காவில் ஃபீனிக்ஸ் மாலில் இருந்து பின்புறமாக வாகனங்கள் வெளியேறி செல்லும் வழியில் பீனிக்ஸ் மால் மதில் சுவற்றை ஒட்டி இருட்டான பகுதிகள் உள்ளது, அந்த இருட்டான பகுதிகளில் காதலர்கள் என்ற போர்வையில் வரும் சிலர் காம விளையாட்டு விளையாடி வருகிறார்கள், இந்த நிகழ்வு அந்த பூங்காவிற்கு நடைபயிற்ச்சிக்கு வரும் ஆண்கள் மற்றும் பெண்களை முகம் சுளிக்க வைக்கிறது, அந்த இடத்தில் இருளை காரணமாக வைத்துக் கொண்டு தகாத செயல்களில் ஈடுபடுகிறார்கள், அந்த இடத்தில் நன்றாக வெளிச்சம் தெரியும் அளவிற்கு அந்த இடத்தில் மின் விளக்கு வைக்க வேண்டும், என பொது மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்,

மேலும் பூங்கா பராமரிப்பு அலுவலக நிர்வாகியும், வேளச்சேரி காவல் நிலைய காவலர்களும் தலையிட்டு இந்த மாதிரி தகாத செயல்கள் இனி மேலும் நடக்காமல் செய்ய வேண்டும் என்பதே பொது மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

Comments


Top Stories

தமிழ் ​அண்மை செய்திகளை தெரிந்துகொள்ள மக்கள் விருப்பம் இணையதளத்தை பின்தொடரவும் 

Thanks for subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2035 by The Global Morning. Powered and secured by Makkal Viruppam

bottom of page