top of page

சென்னை மாநகராட்சி, மணப்பாக்கத்தில் 40 வருடமாக தார் சாலை கேட்டு போராடும் 160 குடும்ப 600 மக்கள் ?

Writer: makkal viruppam
makkal viruppam
Jun 21, 2023
1 min read

Updated: Jun 21, 2023

சென்னை மாநகராட்சி மண்டலம் 12, வார்டு 157, மணப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் நகரில் கடந்த 40 ஆண்டுகளாக 160 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள், இவர்களின் மக்கள் தொகை எண்ணிக்கை சுமார் 600 ஆகும்,

இந்த எம்ஜிஆர் நகருக்கு மணப்பாக்கம் எம்ஜி சாலையிலிருந்து செல்லும் பிரதான சாலை தனியாருக்கு சொந்தமான நிலம் என கூறப்படுகிறது, இந்த தனியாருக்கு சொந்தமான நிலத்தில் மண் சாலையாக கடந்த 40 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்,


இதன் நீளம் 1070 மீட்டர் ஆகும், அகலம் 7.3 மீட்டர் ஆகும், இச்சாலை அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருந்து வருகிறது, மேலும் இச்சாலையில் செடிகள் வளர்ந்து புதர் போல் காட்சி அளிக்கிறது,

சாலை மின் விளக்கு இல்லாத காரணத்தால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர், மழை பெய்யும் நேரம் எல்லாம் இந்த சாலை ஏரி போல் காணப்படுகிறது,


இந்த சாலையில் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் மற்றும் மிதிவண்டி இவைகளை இயக்க பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்,

இங்கு வாழும் மக்கள் பலமுறை போராடியும் எந்த அரசாங்கமும் இவர்களுக்கு ஈவு, இரக்கம் காட்டவில்லை, சமீபத்தில் 18/06/2023 அன்று பெய்த கனமழையிலும் அந்த பகுதி மக்கள் சாலை வசதியின்றி மிகவும் சிரமப்பட்டு போராட்டங்களும் செய்தார்கள், ஆனாலும் தீர்வு கிடைக்வில்லை, இந்த 160 குடும்பத்தைச் சேர்ந்த 600 மக்களும் என்ன பாவம் செய்தார்களோ சாலை வசதி இல்லாமல் அவதிப்படுகிறார்கள் இதை யார் போக்குவார்களோ தெரியவில்லை ?

இவர்களின் 600 வாக்குகளை

பெற்ற கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு முதல்வர் என யாரும் இவர்களின் குறையை தீர்க்க வில்லை என்றால் வேறு யார் வந்து தீர்ப்பார்கள் ?

Comments


Top Stories

தமிழ் ​அண்மை செய்திகளை தெரிந்துகொள்ள மக்கள் விருப்பம் இணையதளத்தை பின்தொடரவும் 

Thanks for subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2035 by The Global Morning. Powered and secured by Makkal Viruppam

bottom of page