சென்னை - போக்குவரத்து தெற்கு மாவட்டம்,சக்திவேல் ஐபிஎஸ் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை போக்குவரத்து காவல் தெற்கு மாவட்டம் சார்பாக தெற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் ஐபிஎஸ் அவர்கள் தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சின்னமலை சந்திப்பில் நடைபெற்றது,

மேலும் உதவி ஆணையர் திருவேங்கடம், சைதாப்பேட்டை, அடையாறு, கிண்டி, வேளச்சேரி , துரைப்பாக்கம், நீலாங்கரை, மவுண்ட், மீனம்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர் காவல் நிலைய ஆய்வாளர்கள், ஒவ்வொரு நாளும் விபத்துக்கள் மற்றும் விபத்துக்கள் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க வேண்டி தலைக்கவசம் போடாமல், சீட்டு சீட் பெல்ட் போடாமல், குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் , அதிவேகமாக வாகனம் ஓட்டும், படிக்கட்டு பயணம்,

அதிக ஆட்களை ஏற்றிச் செல்வது, ஆபத்தாக வாகனம் ஓட்டுதல், உரிமம் இல்லாமல் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது, இது போன்ற 50 நபர்களை அமர வைத்து அவர்களுக்கு அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள் பொதுமக்கள் விழிப்புணர்வு அடையும்படி நிகழ்ச்சி ஒரு வார காலத்திற்கு தொடர்ந்து நடத்துவார்கள் என சக்திவேலு ஐ பி எஸ் அவர்கள் தெரிவித்தார்.

செய்தியாளர் - S.V.கோபிநாத் BA










Comments