வேளச்சேரி குருநானக் கல்லூரி மாணவர்கள் மோதல், நாட்டு வெடிகுண்டை கையிலெடுத்த மாணவர்கள் ?

சென்னை - வேளச்சேரியில் குருநானக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 500க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மாணவர்களிடையே குழு மோதல் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 21/08/2023 இன்று காலை கல்லூரி மாணவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது, ஒரு தரப்பு மாணவர்கள் மற்றொரு தரப்பு மாணவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர், இதில் சில மாணவர்கள் காயமைந்ததாக கூறப்படுகிறது, மாணவர்கள் மோதலால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, தகவலறிந்த கிண்டி போலீசார் கல்லூரிக்கு விரைந்து சென்று நாட்டு வெடி குண்டு வீசிய மாணவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும், மோதல் தொடர்பாக 3 கல்லூரி மாணவர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர், நாட்டு வெடிகுண்டு வீசிய மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர், மேலும் இது தொடர்பாக அடையார் காவல் இணை ஆணையர் மற்றும் கிண்டி காவல் உதவி ஆணையர் சிவா அவர்கள் பிடிபட்ட 3 மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.










Comments