நான் யாருடைய காலிலும் விழுவதும் இல்லை, ஊர்ந்து செல்லுவதும் இல்லை.
- makkal viruppam
- Apr 18, 2025
- 1 min read

அமித் ஷா அல்ல எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நலத்திட்ட விழா, முதல்வர் மு.க.ஸ்டாலின்
வழங்கினார்.
அரசு நலத்திட்டங்கள் வழங்கும் சிறப்புவிழா
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆண்டார்குப்பத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,

ரூ.418.15 கோடி மதிப்பிலான நிறைவு பெற்ற திட்டங்கள் திறக்கப்பட்டன.
ரூ.390.74 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ரூ.357.43 கோடி மதிப்பில், 2,02,531 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 63,124 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. இதுவரை ஒரே நேரத்தில் இத்தனை பட்டாக்கள் வழங்கப்பட்டதில்லை என்றும்,
இது மிகப்பெரிய சாதனையென்று முதலமைச்சர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,
“தமிழ்நாடு மத்திய அரசுக்கு எப்போதுமே
அவுட் ஆப் கன்ரோல் (Out of Control) தான்.
உங்கள் சகாக்கள் யாரையும் அழைத்துக் கொண்டு வாருங்கள், ஒரு கை பார்த்துவிடலாம், என்றார்.

மத்திய அரசு மற்ற மாநிலங்களில் செய்யும் வேலை தமிழ் நாட்டில் நடக்காது. டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு ஒருபோதும் தலை வணங்காது,” என்றார்,
“மோடி கூறியது போல் நாங்கள் அழுகிறவர்கள் அல்ல; நாங்கள் கேட்டுக்கொள்வது உரிமை.
நான் யாருடைய காலிலும் விழுவதும் இல்லை, யாரிடமும் ஊர்ந்து செல்வதுமில்லை,” என்றும்,
அமித் ஷா அல்ல, எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. இது தமிழ்நாடு.
2026 தேர்தலிலும் திராவிட மாடல் ஆட்சி தொடரும். மிரட்டல்களுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம் என்றார்.

திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் - எஸ்.சரவணன்










Comments