டி.ஐ.ஜி மரணம் சிபிசிஐடி விசாரிக்க மத்திய அரசுக்கு எம்ஜிஆர் மக்கள் கட்சி கோரிக்கை.

ஒரு உண்மை தெளிவாகின்றது TNPSC குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று DSP பணியில் ஆரம்பித்த அமரர் விஜய் குமார் அவர்கள் 2009-ல் IPS தேர்விலும் தேர்ச்சி பெற்று காவல்துறையில் எந்த நிற்பந்தத்திற்கும் அடி பணியால் நேர்மையாகவும் உண்மையாகவும் பணியாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் பணியாற்றிய அவர் காவல் பணியில் மாறாக செயல்பட அரசியல் ரீதியாக சில நிற்பந்தங்கள் கூட மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம். நிற்பந்தங்களுக்கு பணிந்து செயல்பட மனமில்லாமல் அதன் காரணமாக கூட அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம், என்று எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி சந்தேகிக்கின்றது,

திமுக அரசு மீது எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை ஆகவே, டிஐஜி அமரர் விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதை சிபிசிஐடி புலன் விசாரனைக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசை எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கின்றது.

எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர், வழக்கறிஞர் எம்.ஜி.ஆர்.விஸ்வநாதன், எம்.ஏ., பி.எல்.










Comments