உள்ளூர்வியாபாரிகளை அழிக்க வந்திருக்கும் லூலூ மார்க்கெட்திறப்பு தமிழக முதல்வரை கண்டிக்கும் வணிகர்கள்

சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளை அழிக்க வந்திருக்கும் லூ லூ மார்க்கெட் திறப்பு,
முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டிக்கும் வணிகர்கள்.

லூலு மார்க்கெட்டை எதிர்த்து ஜூலை 17 ல் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் வணிகர் சங்கத்தினர் அறிவிப்பு. தமிழக வணிகர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்க வந்திருக்கும் லுலு மார்க்கெட்டை மூட வேண்டும் என்ற வணிகர்களின் கோரிக்கைகளுக்கு முன்னோட்டமாக தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கத் தலைவர் சந்திரன் ஜெயபால் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் ஆலோசனைக் கூட்டம்
17/06/2023 அன்று நடைபெற்றது .

இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன்

பொதுச் செயலாளர் சௌந்தர்ராஜன்,

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை பொதுச் செயலாளர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர், கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இது குறித்து வெள்ளையன் மற்றும் சந்திரன் ஜெயபால் கூறியது, அந்நிய நிறுவனமான லூலு மார்க்கெட்டை தமிழகத்தில் திறக்க கூடாது என்று பல போராட்டங்கள் நடத்தப்பட்டது, ஆனாலும் வணிகர்களை பற்றி கவலைப்படாமல் கோவையில் திறக்கப்பட்டுள்ளது, இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை கண்டிக்கிறோம்,

லூ லூ மார்க்கெட் திறக்கப்பட்டதால் கோவையில் உள்ள ஒரு லட்சம் சிறு கடைகள் முதலீடு அழிந்து கடன் பட்டு காணாமல் போய்விடும், இதன் மூலம் 5 லட்சம் பேர் வாழ்வாதாரம் இழப்பார்கள், மலிவு விலையில் பொருட்களை கொடுப்பதாக விளம்பரப்படுத்துவதால் அடுத்த கட்டமாக கோவையில் உள்ள 5000 மொத்த வியாபாரிகள் காணாமல் போவார்கள், எனவே தமிழக வணிகர்களின் வாழ்வாதாரம் மற்றும் சில்லறை மொத்த வியாபாரத்தை சீர்குலைக்க வந்திருக்கும் லூலூ மார்க்கெட்டை மூட வேண்டும் .

அதுவரை கோவையில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தப்படும், ஜூலை 17ஆம் தேதி 50000 வணிகர்கள் பங்கேற்கும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் இதில் எல்லா வணிகர் சங்கங்களும் பங்கேற்கின்றன இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.










Comments