போலீஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட இளைஞர் தற்கொலையா ? மாடியில் ஏன் கதவு திறந்து இருந்தது, சர்ச்சை ?
போலீஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட இளைஞர் தற்கொலையா ? மாடியில் ஏன் கதவு திறந்து இருந்தது, சர்ச்சை ?

சென்னை - வேளச்சேரி காவல் நிலையம்
3 தளங்கள் கொண்டது, சட்டம் - ஒழுங்கு, மற்றும் குற்றப்பிரிவு என செயல்பட்டு வருகின்றன, போக்குவரத்து காவல் நிலையம், வேளச்சேரி, விஜய நகர் மேம்பாலத்தின் கீழே செயல் பட்டு வருகிறது,

கடந்த 21 ம் தேதி வேளச்சேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் முகத்தில் துணியை கட்டியவாறு, சந்தேகம் ஏற்ப்படும் வகையில் ஒரு நபர் சுற்றி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனால் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்,

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி உள்ளனர்.
அப்போது அந்த நபர், உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜா என கூறியிருக்கிறார். மேலும் அவர் தொழிலாளி என்பதும் தெரியவந்துள்ளது,
விசாரணையின் போது அந்த நபர் கழிவறைக்குச் செல்வதாக கூறிவிட்டு, காவல் நிலையத்தின் இரண்டாவது தளத்தில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது,

அப்போது காவல் நிலையம் அருகே இருந்த மரத்தின் கிளையை பிடித்து அவர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த அந்த நபரை, அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கும், பின்னர் மேல்சிகிச்சைக்காக நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையிலும் போலீசார் அனுமதித்தனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி ராஜா உயிரிழந்தார். இந்த விவகாரம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் நேரடியாக வேளச்சேரி காவல் நிலையம் சென்று விசாரணை நடத்தினர். அந்த நேரத்தில் யாரெல்லாம் காவல் நிலையத்தில் பணியில் இருந்தார்கள் எனக் கேட்டு அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் உயர் காவல்துறை அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில், கீழே குதித்த நபர் தப்பிச்செல்ல வேண்டும் என்ற நோக்கில்தான் காவல் நிலையத்தின் இரண்டாவது தளத்தில் இருந்து ஒரு மரத்தின் மீது அவர் தாவியதாகவும், இதில் மரத்தின் கிளை முறிந்ததில் அவரும் கீழே விழுந்தார் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.
காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வடமாநில இளைஞர் தப்பிச்செல்ல முயன்று கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள், காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது,
இந்நிலையில், இதுகுறித்து அடையார் துணை ஆணையர் பொன்கார்த்திக் குமார் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
எப்போதும் பூட்டி வைத்திருக்கும் மொட்டை மாடி கதவு எதற்காக அன்று திறந்து வைக்கப்பட்டது எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மக்கள் விருப்பம் ஆசிரியர் த.மு.தருமராஜா D, Astro.










Comments