top of page

தென் தமிழகத்தில் பிறந்து உலகம் முழுவதும் அறியப்பட்டவர் சிகப்பு நாடா ஆசிரியர் ராமச்சந்திரன் அவர்கள்

Writer: makkal viruppam
makkal viruppam
Jul 4, 2023
1 min read

தமிழகத்தில் 1970 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிகப்பு நாடா பத்திரிகை குமாரசாமி என்கிற கயிலை மன்னன் என்பவரால் துவங்கப்பட்டது, அதில் ஆசிரியராக பி ஆர் என்கிற ராமச்சந்திரன் ஐயா அவர்களால் சிறப்பாக நடத்தப்பட்டது, அன்றைய காலகட்டத்தில் யார் தவறு செய்தாலும் அந்த தவற்றை சுட்டிக்காட்ட என்றுமே சிகப்பு நாடா பயந்ததும் கிடையாது, பணிந்ததும் கிடையாது, புலனாய்வு பத்திரிகையில் நம்பர் ஒன் பத்திரிகையாக சிகப்பு நாடா அன்றும் இன்றும் விளங்கி வருகிறது, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, என பேதமின்றி தவறு என்றால் தவறுதான் என்று சுட்டிக்காட்டிய ஐயா ராமச்சந்திரன் அவர்கள் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்து உலகம் முழுக்க அறியப்பட்டவர் ஐயா ராமச்சந்திரன் அவர்கள், வீரத்திற்கும் விவேகத்திற்கும் பெயர் போன ஐயா ராமச்சந்திரன் அவர்கள் 2014 ஆம் வருடம் உடல் நலக் குறைவினால் இறைவனடி சேர்ந்தார்,

ஐயா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள்

03/07/2023 அன்று வேளச்சேரியில் உள்ள ஐயா அவர்களின் இல்லத்தில் அவர்களின் மகனும் தற்போதைய சிகப்பு நாடா பத்திரிகை ஆசிரியர் P.R.பிரதாப் சந்தர் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.


Comments


Top Stories

தமிழ் ​அண்மை செய்திகளை தெரிந்துகொள்ள மக்கள் விருப்பம் இணையதளத்தை பின்தொடரவும் 

Thanks for subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2035 by The Global Morning. Powered and secured by Makkal Viruppam

bottom of page