வணிகர்கள் அமைப்புகள் இணைந்து தமிழக தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் அறிவிப்பு.

ஜூலை 25ஆம் தேதி செவ்வாய்கிழமை தமிழ்நாடு வணிகர் பேரவையின் தலைவர் த.வெள்ளையன் தலைமையில் தமிழ்நாடு தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்துள்ளனர்,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை,

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு,

மற்றும் தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் சார்பில்,

தமிழ்நாடு வணிகர் பேரவையின் தலைவர்
த.வெள்ளையன் அவர்கள் தலைமையில் 20/07/2023 அன்று சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது,
அதில் அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவை பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை விதித்து வணிகர்களின் இயல்பான சிறு வணிகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் மேற்கண்ட அத்தியாவசிய பொருளான அரிசிக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும்,
அனைத்து தரப்பு மக்களுக்கும் மின்சார கட்டணத்தை முதலில் பொதுவாக உயர்த்திய பின்பும் வணிகம் புரிவோர்களுக்கும் சிறு மற்றும் பெரிய தயாரிப்பு நிறுவனங்களுக்கும் மீண்டும் இரண்டாம் கட்டமாக மின் கட்டணத்தை உயர்த்திய மாநில அரசையும், அதற்காக பரிந்துரை செய்த மத்திய அரசையும், தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் வன்மையாக கண்டிக்கிறது, மேற்கண்ட மின் கட்டண உயர்வை திரும்ப பெற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்,
மேற்கண்ட இரண்டு பாதிப்புகளிலிருந்து எப்படி மீள்வது என்று வணிகர்கள் திண்டாடிக் கொண்டிருக்கும்போது, வெந்த புண்ணில் வேலை பாச்சுவது போல அந்நிய நாட்டின் லூலூ மார்க்கெட் நிறுவனத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்த தமிழக அரசை வணிகர் சங்கங்கள் வன்மையாக கண்டிக்கிறது,
லூலூ மார்க்கெட் தமிழக வணிகத்தை சீர்குலைக்கும், வணிகர்களின் வாழ்வாதாரத்தை நிலைகுலைய செய்து பழி கொள்ளும், லூலு மார்க்கெட்டின் வணிகம் அநீதி வணிகம், ஏமாற்று கள்ள மார்க்கெட் வணிகம்,
மலிவு விலைக்கு பொருள்களை மக்களுக்கு கொடுக்கின்றேன் என்று 100 ரூபாய் அடக்க விலை பொருட்களை 50 ரூபாய்க்கு விற்பனை செய்வது அநீதி வணிகம் தானே, இதே அநீதி வணிகத்தை பெட்ரோல், டீசல் விற்பனையில் உள்ள தனியார் நிறுவனங்கள் பெட்ரோலை லிட்டர் 50 ரூபாய்க்கும், டீசலை 45 ரூபாய்க்கும் விற்பனை செய்தால் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருக்குமா ? இது அநீதி, அரசு, வணிகர்களுக்கு செய்யும் துரோகம், இந்த அநீதி வணிகம் செய்யும் லுலு மார்க்கெட் மூடப்பட வேண்டும்,
அதேபோன்று இந்திய நாட்டின் மற்றும் பன்னாட்டின் அனைத்து தயாரிப்பு பொருட்களையும் அடிமாட்டு விலைக்கு வாங்கி அதில் அனைத்திலும் தன் சொந்த தயாரிப்பு போன்று லூலூ முத்திரையிட்டு பேக் செய்து விற்பனை செய்கிறது, இதே ஏமாற்று கள்ள மார்க்கெட் போலி தயாரிப்பு பேக்கேஜ் விற்பனையினால் எத்தனை நாம் நாட்டு வணிகர்கள் அபராத தொகையோடு சிறை தண்டனையும் பெற்றிருப்பார்கள், இன்று அதே கள்ள மார்க்கெட் வணிகத்தை லூலூ செய்யும்போது அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது, இந்த ஏமாற்று கள்ள மார்க்கெட் வணிகத்தை ஒழிக்க லூலூ மார்க்கெட் மூடப்பட வேண்டும்,
கோவையில் திறக்கப்பட்ட லூலூ மார்க்கெட்டினால் 5000 மொத்த விற்பனை நிறுவனங்களும், 10,000 சூப்பர் மார்க்கெட் மற்றும் எலக்ட்ரானிக் கடைகளும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவணிக மற்றும் தயாரிப்பு நிறுவனங்களும் மூடப்படும் நிலையில் உள்ளது, கோவையில் மட்டும் 10 லட்சம் வணிக குடும்பங்கள் மற்றும் வணிக தொழிலாளர்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் நிற்கதியாக உள்ளார்கள், மக்களின் சிறந்த வாழ்வே அரசின் உச்ச நிர்வாகம், சுயவேலை வாய்ப்பை சுய முதலீட்டில் அமைத்த மக்களின் வணிகத்தை அரசே வீழ்த்துவது நியாயமற்றது, மக்களின் வணிகம் காக்கப்பட லூலூ மார்க்கெட்டை மூடப்பட வணிகர் சங்கங்கள் வீதியில் போராடுகிறது,

மக்களின் மிகப்பெரிய பிரிவான வணிகர்களின் வணிகத்தை வாழ்வாதாரத்தை வணிக குடும்பத்தை காக்க வேண்டியது அரசின் கடமை, தன் நாட்டு மக்களை வீழ்த்த அரசே முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது,
எனவே தமிழக அரசு லுலு மார்க்கெட் ஒப்பந்தத்தை நிராகரித்து திரும்ப பெற கோரியும், பிற நாட்டின் உரிமையை தான் பிறந்த நாட்டிலேயே தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் பிடுங்கப்படுகின்ற கோர நிகழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழக வணிகர்களை காக்க தமிழக அரசை கோரும் தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் ஜூலை 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தலைவர் த.வெள்ளையன் தலைமையில் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.










Comments