கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை அதிர்ச்சியில் காவல்துறை.
- makkal viruppam
- Jul 7, 2023
- 1 min read

குடும்ப பிரச்சனை காரணமாக கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2009 ல் ஐபிஎஸ் பேட்ஜில் பணியில் சேர்ந்தவர் இவர். நீட் தேர்வு மற்றும் சிவசங்கர் பாபா வழக்குகளில் சிறப்பு விசாரணை நடத்தியவர்.

காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூரில் எஸ்பியாக பணியாற்றியவர். கடந்த ஜனவரி மாதம் கோவை டிஐஜியாக பொறுப்பேற்றார்.
தற்போது அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை சரகம் என்பது கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களை கொண்டதாகும்.
07/07/2023 இன்று அதிகாலை தனது வீட்டில் இருந்தபோது உதவியாளரின் துப்பாக்கியை வாங்கி சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது, அதிர்ச்சி அடைந்த உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர்.
தற்கொலைக்கு குடும்ப பிரச்சினை மற்றும் வேறு என்ன காரணங்கள் இருக்கும் என்று விசாரணை தீவிரமாகியுள்ளது.

நான்கு மாவட்டங்களை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்டது போலீசார் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.










Comments