இது ராஜ ராஜ சோழனின் மண், இது ராஜேந்திர சோழனின் மண், எனது சகாவான இளையராஜா இசை, பாடல் என்னை ஆனந்த படுத்தியது பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.
- makkal viruppam
- Jul 27, 2025
- 3 min read
Updated: Jul 28, 2025
இது ராஜ ராஜ சோழனின் மண், இது ராஜேந்திர சோழனின் மண், எனது சகாவான இளையராஜா இசை, பாடல் என்னை ஆனந்த படுத்தியது பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மத்திய கலாச்சாரத் துறை சார்பில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய 1000-வது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது ராஜேந்திர சோழன் படையெடுத்துச் சென்ற 1000-வது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது,

27.07.2025 ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்,
பின்னர், காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கையின் புனித நீரைக்கொண்டு நடைபெற்ற அபிஷேகத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.


பின்பு
ராஜேந்திர சோழன் உருவம் பொதித்த நாணயம் வெளியிட்டார்,

இந்த நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்று பேசினார். தொடர்ந்து,


ஆளுநர் ஆர்.என்.ரவி தஞ்சாவூர் கோயில் ஓவியத்தை பரிசாக வழங்கினார்.

தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வீணை ஓவியத்தை பரிசாக வழங்கினார்.
ஓதுவார்கள் பாடல்கள் பாடினார்கள், அச்சமயம் இரு கரங்களையும் கூப்பியபடி பாடல் முடியும் வரை பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்திருந்தார்.

இளையராஜா அவர்களின் ஆன்மிக இசை நிகழ்ச்சியில் ஓம் சிவோஹம்' பாடல் பாடப்பட்டது.

பின்னர், இளையராஜா இசையமைத்த பகவத் கீதை இசை ஆல்பத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்,

இந்த விழா மேடையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக அரசு சார்பில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன்,
சிதம்பரம் எம்.பி. திருமாவளவன், மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி இ.ஆ.ப, உள்ளிட்டோர் இருந்தனர்.

இந்நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி
நமச்சிவாய வாழ்க... நாதன் தாள் வாழ்க... என்ற வாசகத்தை கூறி வணங்கி உரையை தொடங்குகிறேன்,
வணக்கம் சோழ மண்டலம்,
ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் பாரத தேசத்தின் அடையாளங்கள்,

சிவபக்திபாடல்களை கேட்ட போது எனக்கு உள்ளுக்குள்ளே பரவசமாக இருந்தது,
இந்த ஆன்மிக அனுபவம் என் ஆன்மாவை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டது,

எனது சகாவான இளையராஜாவின் இசை, ஆன்மீக அனுபவம் எனது ஆன்மாவை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டது,
பெருவுடையாரை வழிபடும் பெரும் பேறு எனக்கு கிடைத்துள்ளது,
எப்போதெல்லாம் நயினார் நாகேந்திரன் பெயர் கூறப்படுகிறதோ உங்களிடத்தில் உற்சாகம் பொங்குவதை காண்கிறேன்,

இது ராஜேந்திர சோழனின் மண்,
140 கோடி மக்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்தேன்,

பிரகதீஸ்வரர் ஆலய கட்டுமானம் தொடங்கி 1,000 ஆண்டு ஆன அற்புதமான நாளில் சிவனை வழிபடும் வாய்ப்பு கிடைத்துள்ளது,
இது ராஜ ராஜ சோழனின் மண்,
இங்கு ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியை கண்ட போது எனக்கு பெருமிதமாக இருந்தது,
நாட்டு மக்களின் நலனுக்காகவே எனது வேண்டுதல் இருக்கும்,
இந்திய கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியை கூடுதல் நேரம் கண்டு ரசித்து வியந்ததால் நிகழ்ச்சிக்கு வர தாமதம் ஏற்பட்டது,
நாட்டின் நிரந்தர வளர்ச்சிக்காகவும் பிரார்த்தனை செய்தேன்,
கண்காட்சியை கண்ட பின் தான் மனித சமுதாயம் நன்றாக இருப்பதற்கு எத்தனை விசாலமான எண்ணம் இருந்தது கண்டு வியந்தேன்,

இசை சித்தர் இளையராஜாவின் தமிழ் மொழியில் பகவத் கீதை இசை தொகுப்பை வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது,
இந்திய கலாச்சார அமைச்சகத்தின் கண்காட்சியை அனைவரும் கண்டிப்பாக கண்டுகளிக்க வேண்டும்,
இது ராஜ ராஜ சோழனின் மண்
சோழ அரசர்கள் இலங்கை, மாலத்தீவு, தென்கிழக்கு ஆசியா வரை வியாபாரத்தை விரிவாக்கம் செய்திருந்தனர்,
சிவனை வழிபாடு செய்பவன் சிவபெருமானில் கலந்து விடுகிறான், என நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன,
சிவனை வழிபடுபவன் அவரை போலவே அழிவற்றவனாகி விடுகிறான் என கூறப்படுகிறது,
வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறோம்,
சோழ சம்ராஜ்யத்தில் குடவோலை முறை மூலம் ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடந்தன,
பெரும் பராக்கிரமன் ராஜேந்திர சோழனை நான் வணங்குகிறேன்,
சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரத்தின் பொற்காலம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்,

ஜனநாயகத்தின் தாய் என்ற முறையில் சோழ சாம்ராஜ்ஜியத்தினர் வளர்ச்சியை முன்னெடுத்து சென்றார்கள்,
சோழ சாம்ராய காலக்கட்டம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்றாக இருந்தது,
இங்கிலாந்து நாட்டுக்கு முன்னதாகவே குடவோலை முறை மூலம் ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற்றது,
நீர் மேலாண்மை பற்றி இன்று உலகெங்கும் பேசப்படும் நிலையில் நம் முன்னோர்கள் சோழர்கள் முன்னரே அறிந்து வைத்திருந்தனர்,
ராஜேந்திர சோழனின் அடையாளமே புனித நீராம் கங்கை நீரை கொண்டுவந்து வெற்றியை பறைசாற்றியது தான்,
ராஜேந்திர சோழன் கங்கை நீரை கொண்டுவந்து நிறுவிய ஏரி தான் தற்போது பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது,
கங்கை நீரை காசியில் இருந்து இங்கே கொண்டு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,
கங்கை நீரை கொண்டுவந்து கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் அபிஷேகம் செய்ததை
பாக்கியமாக கருதுகிறேன்,
வெற்றியை பறைசாற்றும் விதமாக ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட
சோழபுரம் நகரத்தை நிறுவி கோவிலை கட்டினார்,
சோழ அரசர்கள் பாரதத்தை கலாச்சார ஒற்றுமை என்ற அடிப்படையில் இணைத்தார்கள்,
சோழ அரசர்களை போல் காசி தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கம், என பாஜக அரசும் ஒன்றிணைத்து வருகிறது,
வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறோம்

புனிதமான செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட நாளை இன்று நினைக்கும், என் நெஞ்சம் பெருமிதத்தில் பொங்குகிறது,

சிதம்பரம் நடராஜர் தீட்சிதர்களை இன்று நான் சந்தித்தேன், ஆலயத்தின்
பிரசாதத்தை எனக்கு அளித்தனர்,
சைவ பாரம்பரியத்தின் உயிர்ப்புள்ள மையங்களில் தமிழ்நாடும் முக்கியமானது,

அன்பே சிவம் என்ற திருமூலரின் கொள்கையை உலகம் கடைபிடித்தால் சங்கடங்கள் தீர்ந்து போய்விடும்,
திருமூலரின் கொள்கையை தான் பாஜக அரசு ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம், என முன்னெடுக்கிறது,

வரலாற்றின் மீது பாரதம் பெருமிதம் கொண்டுள்ளது, தேசத்தின் பாரம்பரியத்தை பாதுகாப்பதில் மிகவும் கருத்துடன் செயல்படுகிறோம்,
நடராஜரின் ஆனந்த தாண்டவ சிலை டெல்லி பாரத் மண்டபத்தில் அழகு சேர்த்து கொண்டிருக்கிறது,
களவாடப்பட்ட நாட்டின் பாரம்பரியத்தை 10 ஆண்டுகளில் பாஜக அரசு மீட்டெடுத்துள்ளது,
600- க்கும் அதிகமான தொன்மையான சாமி சிலைகளை, கலைபடைப்புகளை மீட்டு கொண்டு வந்துள்ளோம்,
உலகில் உள்ள பல பிரச்சனைகளில் இருந்து விடுபட சைவ சித்தாந்தம் நமக்கு பாதை காட்டுகிறது,
இந்தியாவின் வல்லமையை உலகமே வியந்து பார்த்து கொண்டிருக்கிறது,
மாமன்னர்கள் ராஜராஜ சோழன், மற்றும் ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் பிரமாண்டமான சிலைகள் விரைவில் அமைக்கப்படும்,
ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் பலம் வாய்ந்த கடற்படையை கட்டமைத்தனர்,
வளர்ச்சியடைந்த பாரத தேசத்தை அடைய ஒற்றுமையே முக்கியம் என கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி
பேசினார்.
செய்தியாளர் - த.மு.தருமராஜா D, Astro










Comments