top of page

வணக்கம் தமிழகம் நாளிதழ் செய்தியாளரை தாக்கிய குண்டர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

Writer: makkal viruppam
makkal viruppam
Jul 5, 2023
1 min read

நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேரூராட்சியில் நடைபெற்ற டெண்டர் முறைகேடு குறித்து வணக்கம் தமிழகம் நாளிதழ் நீலகிரி மாவட்ட செய்தியாளர்

திரு.ராஜேஷ் அவர்கள்

செய்தி வெளியிட்டுள்ளார், இதனால் ஆத்திரம் அடைந்த பேரூராட்சி தலைவர் அவரது சகோதரர் கிருஷ்ணகுமார், திமுக கவுன்சிலர் மோசஸ், பேரூராட்சி துனை தலைவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெய்சங்கர், ஆல்பர்ட் மற்றும் அவரது சகாக்கள் திரு.ராஜேஷ் அவர்களை தாக்கியும் கொலை செய்து விடுவேன் என்று கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர், உள்ளதை உள்ளபடி மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதே ஒரு செய்தியாளரின் பணி, பணியை செய்வதால் அவரை தாக்குவதும் கொலை மிரட்டல் விடுவதும் இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்தின் மீது தொடுக்கப்படும் நேரடி தாக்குதல் ஆகும், அதிகாரம் கையில் இருப்பதால் அனைத்தையும் கட்டுப்படுத்தலாம் என்கிற போக்கு தற்போது அதிகமாக நடந்து வருகிறது, இது தடுக்கப்பட வேண்டும் செய்தியாளர்

திரு.ராஜேஷ் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்த குண்டர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், என தமிழக அரசுக்கு ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் - தமிழ்நாடு , கோரிக்கை வைக்கிறது, நீலகிரி மாவட்ட நிர்வாகம் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்,

தமிழகத்தில் இது போன்ற போக்கு தொடர்வது அதிகமாக காண முடிகிறது, தமிழ்நாடு அரசு இதனை தடுக்கும் வகையில் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கம் - தமிழ்நாடு , தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கிறது.

Comments


Top Stories

தமிழ் ​அண்மை செய்திகளை தெரிந்துகொள்ள மக்கள் விருப்பம் இணையதளத்தை பின்தொடரவும் 

Thanks for subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2035 by The Global Morning. Powered and secured by Makkal Viruppam

bottom of page