இயற்கை விவசாயம் என்ற புரட்சியை துவங்குங்கள் பிரதமர் நரேந்திர மோடி
- makkal viruppam
- Nov 19, 2025
- 2 min read
இயற்கை விவசாயம் என்ற புரட்சியை துவங்குங்கள் பிரதமர் நரேந்திர மோடி

கார்த்திகை - 03.
நவம்பர் - 19.
நேரம் - 7.11 இரவு.
கோவை கொடிசியா மைதானத்தில் இன்று தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
முன்னதாக
கோவை விமான
நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி,
தமிழ்நாடு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மத்திய
இணையமைச்சர் எல்.முருகன்,
மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப.,
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை,
தமாகா தலைவர் ஜிகே வாசன்,
புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏசி
சண்முகம், தமிழக பாஜக தலைவர்
நயினார் நாகேந்திரன், வானதி
சீனிவாசன்,
உள்ளிட்டோர் வரவேற்றனர்.

கோவை மாவட்டத்தின் பெருமைகள் குறித்தும், இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி விரிவாக பேசிக் கொண்டிருந்தார். அரங்கத்தில் விவசாயிகள், விஞ்ஞானிகள், தன்னார்வலர்கள், தொழில் முனைவோர் மற்றும் பாஜகவினர் அமர்ந்திருந்தனர்.
அரங்கில் பாஜகவினர் அளித்த வரவேற்பை பார்த்து அவர், பீகார் காற்று தமிழ்நாட்டில் வீசுகிறது. என்று கூறினார்.
தொடர்ந்து பிரதமர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, இரண்டு சிறுமிகள் பதாகைகளுடன் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்த்தனர்.

தனியார் பள்ளியைச் சேர்ந்த ஸ்ரிங்கா, மித்ரா ஆகிய இரண்டு சிறுமிகள் அரங்கில் இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். ஸ்ரிங்கா என்ற என்ற சிறுமி, "நான் படித்து முடித்து பட்டம் பெறும்போது இந்திய பொருளாதாரம் இரண்டாம் நிலையில் இருக்கும். நான் பணியில் இருந்து ஓய்வு பெறும்போது இந்தியாவின் பொருளாதாரம் முதல்
நிலையில் இருக்கும். உங்களின் தொலைநோக்கு பார்வைக்கு நன்றி. என்று கூறியிருந்தார்.
மற்றொரு சிறுமியான மித்ரா, "எனக்கு ஓட்டுரிமை வருவதற்குள் தமிழ்நாட்டில் தாமரை மலரும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, "நீண்ட நேரமாக பதாகைகளை கம்பீரமாக ஏந்தியபடி நின்று கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு மிகவும் நன்றி. உங்கள் பதாகையில் இருந்த வாசகங்களை உன்னிப்பாக கவனித்தேன்.
அதை அருகில் உள்ள பாதுகாவலர்கள் மூலம் என்னிடம் கொடுங்கள்.
சிறுமிகளை பிறகு சந்திக்கிறேன். அவர்கள் பதாகையில் எழுதியிருந்ததையும் கவனத்தில்
எடுத்துக் கொள்கிறேன்." என பிரதமர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே கூறினார்.
அதன் பிறகு அங்கிருந்த பாதுகாவலர்கள் சிறுமிகளிடம் இருந்த பதாகைகளை மீட்டு பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் சிறுமிகளிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவையில் மருதமலையில் குடிகொண்டிருக்கும் மருதமலை முருகனை நான் தலைவணங்குகிறேன். கலாசாரம், கனிவு ஆகியவற்றை தனக்கு சொந்தமாக்கி கொண்ட மண் கோவை.
தென் மாநிலங்களின் தொழில்துறையின் சக்தி பீடமாக கோவை திகழ்கிறது. ஜவுளித்துறையில் நாட்டிற்கு பங்களிப்பு செய்கிறது.
தமிழகத்தின் விவசாயிகளின் துணிச்சலை பாராட்டுகிறேன். இங்கே எம்பியாக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவி வகித்து நாட்டிற்கு வழிகாட்டுகிறார்.
இயற்கை விவசாயம் சிறப்பானது. எனது மனதுக்கு நெருக்கமானது. இந்த மாநாட்டிற்கு வராமல்போயிருந்தால் நான் பல விஷயங்களை கற்காமல் போயிருப்பேன்.
இயற்கை விவசாயத்தின் மையமாக இந்தியா மாறுகிறது. நமது இளைஞர்கள் விவசாயத்தை நவீனமயமாக்கி வருகின்றனர். இதனால், கிராம பொருளாதாரம் மேம்படும்.
இந்திய விவசாயத்துறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. விவசாய ஏற்றுமதி இரு மடங்கு அதிகரித்துள்ளது.
வரும் ஆண்டுகளில் இந்தியாவில் பல மாற்றங்கள் நிகழும். உலக அரங்கில் முக்கிய இடம்பெறும். இயற்கை வேளாண்மை இந்த நூற்றாண்டின் தேவை.
இயற்கை விவசாயத்துடன் சிறுதானியம் பயிர் செய்ய வேண்டும். இது பூமியின் வளத்துக்கு ஊக்கம் அளிக்கிறது.
தமிழகத்தின் உணவு பண்பாட்டில் சிறுதானியங்கள் எப்போதும் உண்டு. தமிழகத்தில் முருகனுக்கு தேனையும், திணையையும் படைக்கிறோம் தமிழகத்தில் கம்பு, சாமை போன்ற உணவு பொருட்கள் பல தலைமுறையாக உள்ளன.
விவசாயத்தில் வாழும் பல்கலையாக தென் மாநிலங்கள் திகழ்கின்றன. கேரளா மலை பகுதிகளில் பல அடுக்கு விவசாயம் செய்யப்படுகிறது. தென்னை, பாக்கு மரம் இடையே ஊடுபயிராக மிளகு உள்ளிட்டவை பயிர் செய்யப்படுகின்றன.
ஒரு பயிர் விவசாயத்தில் இருந்து விவசாயிகள் மாற வேண்டும். ஊடு பயிர் சாகுபடி செய்ய வேண்டும். ஊடுபயிர் சாகுபடி முறையை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.
ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு பருவத்தில் இயற்கை விவசாயம் என்ற புரட்சியை துவக்குங்கள். இயற்கை வேளாண்மை சந்தையை வளப்படுத்த வேண்டும்.
விவசாயிகளின் தன்னிறைவுக்கு அரசின் ஆதரவு முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
செய்தியாளர் - மக்கள் விருப்பம் இதழ் உதவி ஆசிரியர், திருப்பூர் - ர.கலைச்செல்வம்.










Comments