ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, குற்றவாளியின் தலைக்கு 3 கோடியா ?
மார்கழி - 28.
ஜனவரி - 12.
நேரம் - 11.15 காலை.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங், 2024 ஜூலை 5 - 2024 ஆம் ஆண்டு சென்னை பெரம்பூர் பகுதியில், அவரது இல்லம் அருகே ஆர்ம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சம்பவத்திற்குப் பின்னர், சென்னை காவல்துறை விசாரணையைத் தொடங்கி, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் சம்போ செந்தில் (எ) செந்தில்குமரன், இதுவரை காவல்துறையால் கைது செய்யப்படவில்லை என்றும், அவர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால், விசாரணையின் வேகம் மற்றும் திசை குறித்து அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கேள்விகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பின்னணியில், நம்பத்தகுந்த முறையில் அறியப்பட்ட தகவலின்படி, ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னர், அவரின் ஆதரவாளர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியுடன் தொடர்புடையவர்களாகக் கூறப்படும் சிலர், சம்போ செந்தில் @ செந்தில்குமரன்-ஐ கொலை செய்யும் நோக்கில் “அவரின் உயிர்க்கு 3 கோடி (மூன்று கோடி ரூபாய்) பரிசுத் தொகை” அறிவிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.










Comments