தமிழகத்தில் எம்ஜிஆர் சிலைகள் உடைப்பு, ஆளும் திமுக அரசை கண்டிக்கும் எம்ஜிஆர் மக்கள் கட்சி.
- makkal viruppam
- Aug 5, 2023
- 1 min read

நிர்வாகத்தில் ஒழுக்கம் கெட்ட திமுக அரசுக்கு எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி கடும் கண்டனம்,
எம்.ஜி.ஆர் இல்லையென்றால் திமுக என்ற கட்சியே தொடக்கம் இல்லை.

ஊழல் மு.கருணாநிதி முதலமைச்சராக வந்திருக்க முடியாது, ஊழல் மகன் மு.க.ஸ்டாலின் மக்களிடத்தில் பொய் சொல்லி முதலமைச்சராகியிருக்க முடியாது,
ரவுடி அரசியல்,ரவுடி நிர்வாகம் செய்கின்ற திமுக அரசு ரவுடிகளை ஏவிவிட்டு எம்.ஜி.ஆர் சிலைகளை திட்டமிட்டு சேதப்படுத்தி வருகின்ற ரவுடி ராஜ்ஜியத்தின் தலைவன், முதலமைச்சர் என்ற பெயரில் வலம் வரும் மு.க.ஸ்டாலினுக்கு "எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி" கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றது,

கடந்த வாரம் சென்னை - ராயபுரத்தில் எம்.ஜி.ஆர் சிலை மீது திமுகவினர் பெயின்ட் ஊற்றி சேதப்படுத்தியுள்ளதற்கு"எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி" திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கின்றது,

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 6 இடங்களில் எம்.ஜி.ஆர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன, இதற்கு திமுக அரசு தார்மீகப் பொறுப்பேற்று தமிழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு முழு பொறுப்பேற்று இரும்பு பாதுகாப்பு கவசங்கள் ஏற்படுத்த வேண்டும்,
இனி வரும் காலங்களில் எம்.ஜி.ஆர் சிலைகள் மீது வன்முறைகள் நடந்தால் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு மக்களை கூட்டி எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி போராட்டம் நடத்தும் என்று எச்சரிக்கை செய்கின்றது,

என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்,
எம்ஜிஆர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர், வழக்கறிஞர்
எம்.ஜி.ஆர்.விஸ்வநாதன், எம்.ஏ., பி.எல்.










Comments