top of page

சென்னை - கூடுவாஞ்சேரி, அருங்கல் அருகே 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டனர்.

  • Writer: makkal viruppam
    makkal viruppam
  • Aug 1, 2023
  • 1 min read

சென்னை - கூடுவாஞ்சேரி அருகே உள்ள அருங்கல் என்ற இடத்தில் 01/08/2023 இன்று அதிகாலை 3.30 மணி அளவில் கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் முருகேசன் அவர்கள் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அதிவேகமாக வந்த கருப்பு நிற ஸ்கோடா

எனும் 4 சக்கர வாகனம் வாகனம் போலீஸ் வாகனம் மீது இடித்து போலீஸ் வாகனத்தை தாக்கியுள்ளனர், அந்த வாகனத்தில் இருந்து நான்கு ரவுடிகள் கீழே இறங்கி ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை அறிவாளால் வெட்ட முயன்ற

போது உதவியாளர் சிவகுருநாதன் என்பவர் மீது வயிற்றிலும் கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது, அவரது தலையில் வெட்ட ரௌடிகள் எண்ணிய போது குனிந்து தப்பியுள்ளார், காயம்பட்ட உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், ஸ்கோடா வாகனத்தில் வந்த மொத்தம் நான்கு ரவுடிகள் வந்த நிலையில் இரண்டு பேரை போலீசார் சுட்டு என்கவுண்டர் பண்ணியுள்ளனர்,

மேலும் இரண்டு பேர் தப்பி ஓடி விட்டனர் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர், மேலும் அந்தப் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர், ஆதனால் அந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்படுகிறது, சுடப்பட்ட சோட்டா வினோத் என்பவன் மீது 10 கொலைகள் உட்பட ஐம்பதிற்கும் மேற்பட்ட வழக்குகளும், ரமேஷ் என்பவன் மீது ஐந்து கொலைகள் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,

மேலும் உயிரிழந்த சோட்டா வினோத் ரமேஷ் இவர்களின் உடல் செங்கல்பட்டு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.


Comments


Top Stories

தமிழ் ​அண்மை செய்திகளை தெரிந்துகொள்ள மக்கள் விருப்பம் இணையதளத்தை பின்தொடரவும் 

Thanks for subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2035 by The Global Morning. Powered and secured by Makkal Viruppam

bottom of page