தனியார் கோவிலை, இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சேர்க்க லஞ்சம், அதிகாரி கைது.
தனியார் கோவிலை, இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சேர்க்க லஞ்சம், அதிகாரி கைது.

கோயம்புத்தூர் மாவட்டம், பாப்பம்பட்டி கிராமத்தில் தனியார் வசம் உள்ள ஒரு
கிராம நிர்வாக கோயில் உள்ளது.

அந்தக் கோயிலுக்கு ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது ஆனால், கோயில் நிர்வாகத்தில் சரியாக கணக்கு இல்லை என புகார் இருந்து வந்தது.

ஆகவே அந்தக் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையினில் சேர்க்க வேண்டும் என்று, சுரேஷ்குமார் என்ற கோவில் நிர்வாகி
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை அளித்து
இருந்தார்.

இந்த கோவில் நிர்வாகம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவின் மீதான விசாரணையில், 12 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றம் உத்தரவிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இது குறித்து சுரேஷ்குமார் கேட்டதற்கு,
உங்கள் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையில் இணைக்க 3 லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும், என்று உதவி ஆணையர் இந்திரா கேட்டுள்ளார்.
பணம் தர சுரேஷ்குமார் மறுக்கவே, 1.5 லட்சம் ரூபாயாவது கொடுக்க வேண்டும், என்று இந்திரா கேட்டுள்ளார்.
பணம் கொடுக்க விருப்பம் இல்லாத சுரேஷ் குமார் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரின் அறிவுறுத்தல்படி, சுரேஷ் குமார்
17.07.2025 அன்று இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் இந்திராவிடம் 1.5 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், இந்திராவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்திரா லஞ்சம் பெற்றது அங்குள்ள சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது, இந்திராவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
செய்தியாளர் - த.மு.தருமராஜா D, Astro










Comments