“யாரை கும்பிட வேண்டும் யாரை கூப்பிட வேண்டும்”என்ற பாட திட்டத்தினை கொண்டு வரப்போகிறாரா லியோனி ?

லியோனி அவர்கள் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக பதவி வகிக்க தகுதியானவரா?
மேடையில் பேசும்போது என்ன பேசுகிறோம் ஏது பேசுகிறோம் என்ற சிந்தனையே இல்லாத நீங்கள் மாணவர்களின் கற்றல் திறனை வளர்க்கும் பாடநூல் துறைக்கு தலைவரா?
குறிப்பாக பெண்கள் குறித்து இழிவாக பேசுவது என்றால் மிகமிகப் பிடிக்கும் என்ற மனநிலை மிகவும் மோசமானது ஆகும்.அதிலும் இறந்தவர் குறித்து பேசமாட்டேன் என்று சொல்லி கொண்டே மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் பற்றி இழிவாக பேசியது மன்னிக்க முடியாத ஒன்றாகும்.

யாரோ குறிப்பிட்டார்கள் என்று பேசினால் தானாக பேசவில்லை என்று தப்பித்து கொள்ளலாம் என்று பேசுவது படுகேவலமான செயல்.
ஒரு பெண்ணை கும்பிட வேண்டும் என்றும் ஒரு பெண்ணை கூப்பிட வேண்டும் என்றும் பேசும் ஒரு நபர் பாட நூல் கழகத் தலைவரா?தரங்கெட்ட மனிதராகவே இந்த சமூகத்தால் அடையாளம் காணப்படுவீர்.

எத்தனை பெண்களை தவறான கண்ணோட்டத்தோடு பார்த்து கூப்பிட்டீர்களோ அந்த அனுபவம்தானே இப்படி பேச வைக்கிறது.
தராதரம் இல்லாத நபரை பாட நூல் கழக பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்க அரசு உத்தரவிட வேண்டும்.
-
மூ.ராஜேஸ்வரிபிரியா
அனைத்து மக்கள் அரசியல் கட்சி
நிறுவனத் தலைவர்










Comments