ஆபாச படங்கள் அனுப்பி, போதை ஆசாமி மிரட்டல், இளம் பெண் தற்கொலை, நீதி வெல்லுமா ? தண்டனை கிடைக்குமா ?
Updated: Jun 26, 2025

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்த பெண் ஊழியர் கண்ணகி நகர் வ உ சி தெருவில் தங்கி இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் பெயர் கமலி என்ற காஞ்சனா தேவி சொந்த ஊர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஆகும்.
மதுரை T.வாடிப்பட்டியை சேர்ந்தவர் கமலி என்ற காஞ்சனா தேவி இவர் சென்னை, துரைப்பாக்கம், கண்ணகி நகர்,
வ.உ.சி.தெருவில் வாடகைக்கு ஒரு அறை எடுத்து தங்கி அருகில் உள்ள சுசி சிஸ்டம் என்ற தனியார் ஐடி நிறுவனத்தில் கடந்த ஓர் ஆண்டாக பணிபுரிந்து வந்துள்ளார்,

இந்த நிலையில் கடந்த 21/06/2025 சனிக்கிழமை அன்று மதியம் சுமார்
12 மணிக்கு மேல் தான் தங்கி இருந்த விடுதியில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்,
தகவல் அறிந்த கண்ணகி நகர் காவல் நிலைய ஆய்வாளர் நடராஜன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

அதன் பின்பு மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் உள்ள அவரது உடன் பிறந்த சகோதரிக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்,
அதன் பின்னர் உறவினர்கள்
கண்ணகி நகர் T.5 காவல் நிலையத்துக்குச் சென்று புகார் கொடுத்துள்ளனர், அந்தப் புகாரில் காஞ்சனா தேவி தற்கொலை செய்து கொண்டதற்கு கார்த்திக் என்ற நபர் மீதுதான் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகாரைப்பெற்றுக் கொண்ட கண்ணகி நகர் காவல் ஆய்வாளர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து,
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முடிந்த பின் பெண்ணின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் சொந்த ஊரான மதுரை வாடிப்பட்டிக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

தற்போது
தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
மருத்துவ பரிசோதனையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு காஞ்சனா தேவி
மன உளைச்சலால் தொடர்ந்து தூக்கம் இல்லாமல் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காஞ்சனா தேவி தற்கொலை செய்து கொண்டதற்கு என்ன காரணம் என உறவினர்கள்
மற்றும் அப்பகுதி பொதுமக்களிடம் விசாரித்தபோது அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளனர்.

கோவை G.C.T.(COLLEGE) கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியராக மூன்றாவது வருடம் படித்துக்கொண்டு Dynamo chemicals என்ற நிறுவனத்தில் பகுதிநேர வேலை பார்த்து வரும் கார்த்தி என்பவனின் சொந்த ஊர் மதுரை வாடிப்பட்டி.
இவனுடைய தாத்தா கறிக்கடை அழகர், இவனுடைய அப்பா பெயர் துரை, தற்போது சூலூர் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார், கார்த்திக் என்ற நபரின் தந்தையுடன் பிறந்த சகோதரி அம்சா என்ற அன்னலட்சுமி (கணவர் பெயர் நிலா மோகன்)
வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் பிரிவில் தற்போது வேலை செய்து வருகிறார்,
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மதுரை, வாடிப்பட்டியில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது (அப்போது வயது 14)
கார்த்தி (தற்போது வயது 24) இந்தப் பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளான்,
அந்த நட்பை வைத்து கோயமுத்தூரில் உள்ள ராமகிருஷ்ணா கல்லூரியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்தபோது இந்தப் பெண்ணுக்கு (காஞ்சனா தேவிக்கு) தொடர்ந்து போன் செய்து காதலிக்கப்பதாக கூறிவந்துள்ளான்.
ஆனால் காஞ்சனா தேவி நட்பாக மட்டுமே பழகுகிறேன் எனக் கூறி வந்த நிலையில் கார்த்தியும் அவனது நண்பருமான பொன்னரசு (வயது 24) ஆகிய இருவரும் தொடர்ந்து இந்த பெண்ணிடம் காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்துள்ளனர்.
மேலும் கார்த்தி மற்றும் அவனது நண்பர் பொன்னரசு மற்றும் அவனது நண்பர்கள் அனைவரின் நடத்தையும் சரியில்லை என போகப் போக தெரிந்துள்ளது .
கார்த்தி கஞ்சா போதைக்கு அடிமையானவன் என்றும் தகவல் தெரிந்துள்ளது,
அதன் பின்னர் நண்பன் பொன்னரசு மற்றும்
அவனது கூட்டாளிகள் அனைவருமே கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் காஞ்சனா தேவிக்கு தெரியவந்துள்ளது . அதன் பின்னர் இந்தப் பெண் கார்த்தி என்ற நபரிடம் கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் இருந்து நட்பை துண்டிக்க முயற்சி செய்துள்ளார்,
அதன் பின்னர் அந்தப் பெண் சென்னை தனியார் ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சென்று விட்டார், இந்த நிலையில் கடந்த ஒரு வருடம் ஆக திருமணம் செய்யச் சொல்லி கஞ்சா போதையில் அந்த பெண்ணின் இன்ஸ்டாகிராம் இல்
தொடர்ந்து மிரட்டி வந்துள்ளான் கார்த்திக்,
ஆனால், இதையெல்லாம் அவர்கள் உறவினர்களிடம் காட்டிக்கொள்ளாமல் ஜூன் மாதம் 10 ஆம் தேதி வாடிப்பட்டியில் நடந்த கோவில் திருவிழாவிற்காக அந்தப் பெண் சொந்த ஊருக்கு வந்து குடும்பத்துடன் சந்தோசமாக இருந்து விட்டு சென்று உள்ளார்,
கார்த்திக் மிரட்டி வந்ததை வீட்டில் சொல்ல முடியாத அந்தப் பெண் விடுமுறை முடிந்து சென்னைக்கு வேலைக்கு சென்ற பின்பு கடந்த 15 ஆம் தேதியிலிருந்து
போதைக்கு அடிமையான
கார்த்திக் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்து மிரட்டி வந்துள்ளான்,
இதனால்
மன உலைச்சல் ஏற்பட்ட காஞ்சனா தேவி
கஞ்சா போதை ஆசாமி கார்த்தியின் நண்பர் பொன்னரசிடம், அண்ணா கார்த்தியை எனக்குப் பிடிக்காததால் நான் பேசுவதை நிறுத்திக் கொண்டேன் என்றும், நட்பாகத்தான் பழகினேன், திருமணம் செய்ய எனக்கு விருப்பமில்லை என்னை வற்புறுத்த வேண்டாம் என்னை விட்டு விடச் சொல்லுங்கள், என
18 ஆம் தேதி இன்ஸ்ட்டாவில் உதவி கேட்டு மெசேஜ் அனுப்பி உள்ளார்.
அதற்கு பொன்னரசு அதெல்லாம் சரியாகிவிடும், நீ உடனே சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு கிளம்பி வா பேசிக் கொள்ளலாம் என இந்த பெண்ணை பொன்னரசு மெசேஜ் செய்து அழைத்துள்ளான்.
அந்த மெசேஜை பார்த்த இந்த பெண் அவனும் உதவி செய்யவில்லை என தெரிந்து கொண்டு வேற வழி இல்லாமல் தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு முழுவது தூக்கம் இல்லாமல் இரவு முழுவதும் மன உளைச்சலில் இருந்ததால் நிறுவனத்தில் வேலை செய்ய முடியாமலும் இருந்துள்ளது.
இந்த பெண்ணுடன் வேலை பார்த்து உடன் தங்கி வந்துள்ள மற்றொரு பெண்ணுக்கும் இது அனைத்தும் தெரிந்தும் அந்தப் பெண்ணும் உறவினர்களுக்கு தகவல் கொடுக்காமல் மறைத்துள்ளார்,
அதன் பின்னர் கார்த்தி கஞ்சா போதையில்
21.06.2025 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் கார்த்தி தனது நண்பரான பொன்னரசுவிடம் பேசிவிட்டு பின்பு காஞ்சனா தேவிக்கு இன்ஸ்ட்டாவில் மிரட்டி மெசேஜ் அனுப்பியுள்ளான்.
அந்த மெசேஜை காஞ்சனா தேவி பார்த்துவிட்டு மன உளைச்சலில் தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் இலக்கியா, மற்றும்
ஶ்ரீனிவாஸ் ஆகிய இரண்டு பேருக்கும் 21 ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு அணிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர்கள் உடனே அந்த மெசேஜை பார்க்காமல் அன்று மதியம் ஒரு மணிக்கு மேல் தான் அந்த மெசேஜை பார்த்துள்ளனர்.
அதன் பின்பு இந்த பெண்ணிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தொலைபேசியை எடுக்கவில்லை, சந்தேகம் அடைந்த அந்தப் பெண்கள் உடனே இந்த பெண்ணுடன் தங்கி இருந்த பெண்ணுக்கு தகவல் கொடுத்துள்ளனர்,
அந்தப் பெண்ணையும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தொலைபேசியை எடுக்கவில்லை,
உடனே அந்தப் பெண் புறப்பட்டு தான் தங்கியிருக்கும் இடத்திற்கு மதியம் 1:30 மணிக்கு வந்து பார்த்தபோது காஞ்சனா தேவி தங்கி இருந்த அறையின் உள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட அந்தப் பெண் பயன்படுத்தி வந்த டேப்ல் (tab) கார்த்தி, பொன்னரசன், இரண்டு பேரும் இன்ஸ்டால் மாறி மாறி திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தி மிரட்டி அனுப்பிய மெசேஜ் அனைத்தும் வைத்து பார்த்து பார்க்கும்போது இந்தப் பெண் தற்கொலை செய்து கொள்வதற்கு
கார்த்தி என்ற நபர் மற்றும் அவரது நண்பர் பொன்னரசு ஆகிய இரண்டு பேர் தான் காரணம் என தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
தங்களது பெண் தற்கொலை செய்து கொண்டதை தாங்க முடியாத ஒட்டுமொத்த உறவினர்களும் துக்கத்தில் மூழ்கியுள்ளனர் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
பள்ளிக்கூடம் படிக்கும் காலத்தில்
நட்பாக பழகி வரும் ஒரு பெண்ணை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தி மிரட்டுவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது, ஆகவே காவல்துறையினர்
தற்கொலைக்கான காரணத்தை மூடி மறைக்க முயற்சி செய்யாமல், உறவினர்கள் கொடுத்துள்ள ஆதாரத்தை வைத்து
தீவிர விசாரணை செய்து தற்கொலைக்கு காரணமான கார்த்திக் மற்றும் அவனுடைய நண்பர் பொன்னரசு ஆகிய இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தால் மட்டுமே இது போன்ற பெண்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுத்து நிறுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகவே பொறுத்திருந்து பார்ப்போம் காவல்துறை உயர் அதிகாரிகளின்
நடவடிக்கையை ?










Comments