top of page

லூலூ மார்க்கெட் அனுமதியை ரத்து செய்யக்கோரி வணிக அமைப்புகள் போராட்டம் வெள்ளையன் சௌந்தர்ராஜன் கைது.

  • Writer: makkal viruppam
    makkal viruppam
  • Jul 26, 2023
  • 1 min read

பிரிந்த வணிகர்களை ஒன்றினைத்த லூலூ மார்க்கெட்

கடந்த மாதம் கோயம்புத்தூரில் லுலு மார்க்கெட் திறக்கப்பட்டது, இதனால் மொத்தம் மற்றும் சில்லறைய வியாபாரிகள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள் எனவும், சென்னையில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் லூலூ மார்க்கெட் திறக்கப்பட உள்ளது, ஆதலால் உள்நாட்டு மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் மற்றும் வியாபாரிகள் அடியோடு அழியும் சூழ்நிலை உருவாகி உள்ளது எனவும்,

லூலூ மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டில் கொடுத்திருக்கும் அனுமதியை ரத்து செய்யக்கோரி வணிக அமைப்புகள் ஒன்று கூடி 25/07/2023 அன்று சென்னை - விருந்தினர் மாளிகையில் சட்டசபை முற்றுகை போராட்டம் அறிவித்தனர்,

போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கினார், இந்த போராட்டத்தில் தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் ஆகிய அமைப்புகள் சேர்ந்து போராட்டம் நடத்தினார்கள், அதன்படி

தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகை இட வணிகர்கள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே திரண்டனர், அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர், அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு வணிகர்கள் சாலை மறியல் செய்தார்கள்,

இதில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன், பொதுச் செயலாளர் சௌந்தர்ராஜன், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி, தமிழ்நாடு வணிகர்கள் மகா ஜன சங்கத் தலைவர் சந்திரன் ஜெயபால், செயலாளர் மயிலை எம் மாரி தங்கம், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் முத்துக்குமார் பொதுச் செயலாளர் கே சி ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் வணிகர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்களை கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை சமுதாய நலக்கூடத்திற்கு கொண்டு சென்று அடைத்து வைத்தனர்,

பின்பு மாலை விடுவிக்கப்பட்டனர்,

வணிகர்களின் போராட்ட செய்தி அறிந்து தலைமை செயலகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது,

மேலும் ஒரே அமைப்பாக இருந்த வணிகர்கள் பல அமைப்புகளாக பிரிந்தாலும், லூலூ மார்க்கெடை அகற்ற இந்த போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments


Top Stories

தமிழ் ​அண்மை செய்திகளை தெரிந்துகொள்ள மக்கள் விருப்பம் இணையதளத்தை பின்தொடரவும் 

Thanks for subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2035 by The Global Morning. Powered and secured by Makkal Viruppam

bottom of page