காவல் துறையினரின் மெத்தனத்தால் ரவுடிகளால் வெட்டப்பட்டு உயிருக்கு போராடும் செய்தியாளர்.
Updated: Jan 25, 2024

திருப்பூர்
நியூஸ் 7 செய்தியாளர்
நேச பிரபு ரவுடிகளால் வெட்டப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி,
ரவுடிகள் தன்னை தாக்க வருகிறார்கள் என போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தும்,
அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தும் காவலர்கள் வர தாமதமானதால்,
ரவுடிகளால் வெட்டப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் செய்தியாளரை காப்பாற்றி
குற்றவாளிகளை கைது செய்யுமா காவல்துறை ?
மெத்தனம் காட்டுமா காவல் துறை ?
ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் - தமிழ்நாடு
சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம்.
இந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்க
நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு
குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

D.M.தருமராஜா D, Astro
மாநில தலைவர்
ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் - தமிழ்நாடு.
9884655661.










Comments