top of page

நாகூரில், இராமாயணம் புத்தகத்தில் வைத்து பார்சல் வெடிகுண்டு மூலம் கொலையான தங்கம் அவர்களின் நினைவு நாளுக்கு தடை விதித்த காவல்துறை. அனுமதி அளித்த நீதிமன்றம்.

  • Writer: makkal viruppam
    makkal viruppam
  • Jul 19, 2025
  • 1 min read

நாகூரில், இராமாயணம் புத்தகத்தில் வைத்து பார்சல் வெடிகுண்டு மூலம் கொலையான தங்கம் அவர்களின் நினைவு நாளுக்கு தடை விதித்த காவல்துறை.

அனுமதி அளித்த

நீதிமன்றம்.



கடந்த 1995ம் வருடம் சென்னையில் இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டவன் நாகூர் அபுபக்கர் சித்திக். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த

அபுபக்கர் சித்திக்,

நாகூரில் அப்போதைய இந்து முன்னணி பிரமுகரும், தற்போது தமிழ்நாடு சிவசேனா மாநிலத் தலைவர்,

தங்க முத்துகிருஷ்ணன் வீட்டிற்கு 1995 ம் ஆண்டு இராமாயணம் புத்தகத்தில் பார்சல் வெடிகுண்டு வைத்து அனுப்பியதில் தங்க முத்துகிருஷ்ணன் மனைவி தங்கம் என்பவர், வெடிகுண்டு வெடித்து பீஸ் பீஸாக வெடித்து சிதறி பலியானார்,


மேலும், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் குண்டு வைத்தது உள்பட 10க்கும் மேற்பட்ட குண்டு வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டான்.

2013ல் பெங்களூர் பாஜக அலுவலகம் முன்பு குண்டு வெடித்த வழக்கிலும் இவன் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்தான். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி வந்த நாகூர் அபுபக்கர் சித்திக்கை பிடிக்க தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் பல தனிப்படைகளை அமைத்து விசாரித்து வந்ததில் அபுபக்கர் ஆந்திராவின் அன்னமையா மாவட்டத்தில் பதுங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.

அங்கு சென்று அபுபக்கர் சித்திக்கை தமிழக போலீஸார் கைது செய்தனர்.


அவனுடன் நெல்லையை சேர்ந்த மன்சூர் என்ற நபரையும் கைது செய்துள்ளனர். அவனும் பல இடங்களில் குண்டு வைத்த வழக்கில் தொடர்புடையன் என தெரிய வந்துள்ளது.


1995 ம் வருடம், ஜூலை 03 ம்தேதி நாகூரில் இராமாயண புத்தகத்தில் பார்சல் வெடி குண்டு வைத்து, முத்துகிருஷ்ணனை கொலை செய்ய அபுபக்கர் சித்திக் அனுப்பிய புத்தகத்தை முத்து கிருஷ்ணன் மனைவி தங்கம் வாங்கி பிரித்தவுடன் பல துண்டுகளாக வெடித்து சிதறி பலியானார், அப்போது அவர்களுக்கு 2,4,6,8 வயதுகளில் சிறு சிறு நான்கு பெண் குழந்தைகள் இருந்தனர்.


தங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி வருடா வருடம் ஜூலை 03 ம் தேதி நடந்து வந்த நிலையில், சென்ற வருடமும், இந்த வருடமும் நாகூர் மற்றும் நாகப்பட்டினம் காவல்துறை அனுமதி தராததால், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு படி சென்ற வருடம் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த வருடமும் ஜூலை 20, ம் தேதி அன்று நாகூரில் தங்கம் அவர்களின் 30 ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது, நீதிமன்றத்தின் அனுமதியுடன்.


செய்தியாளர் - த.மு.தருமராஜா D, Astro

Comments


Top Stories

தமிழ் ​அண்மை செய்திகளை தெரிந்துகொள்ள மக்கள் விருப்பம் இணையதளத்தை பின்தொடரவும் 

Thanks for subscribing!

  • Instagram
  • Facebook
  • Twitter

© 2035 by The Global Morning. Powered and secured by Makkal Viruppam

bottom of page